வெள்ளி, 30 ஏப்ரல், 2021

1859. சிட்டி' சுந்தரராஜன் - 6

நீர் வீழ்ச்சி 

'சிட்டி'


1943-இல் 'சக்தி' யில் வந்த கவிதை.


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

'சிட்டி' சுந்தரராஜன்


வியாழன், 29 ஏப்ரல், 2021

1858. கோபுலு - 8

ஜீவனைக் கைப்பற்றிய தூரிகை!

சீதா ரவி 

[ வடிவாக்கம்: மணியம் செல்வன் ]


29 ஏப்ரல். கோபுலு அவர்களின் நினைவு தினம். அவரைச் சந்தித்த நினைவுகளும், தொலைபேசி மூலம் பேசியதும் பசுமையாக உள்ளன. என்றும் இருக்கும். 

2010-இல் அவரைச் சந்தித்தபோது, அவரிடம் சமர்ப்பித்த வெண்பா:

நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும்,

ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன்

சோபிக்கும் சித்திரமும் தோமிலா ஹாஸ்யமிட்ட

கோபுலு ஓவியர் கோ 

வாழ்க அவர் புகழ்!

அவர் மறைவுக்குப் பின் கல்கியில் வந்த அஞ்சலி கீழே. 



[ நன்றி : கல்கி, அமுதசுரபி ] 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

கோபுலு

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

1857. எஸ்.ஏ.பி. -1

குமுதத்தின் வெற்றிக்குப் பின்னால்... எஸ்.ஏ.பி.அண்ணாமலை!

கலைமாமணி விக்கிரமன்  

====

1947-இல் குமுதம்தொடங்கியது. அப்போது 'ரவி'யின் அழகான கோட்டோவியங்களுடன் வந்த அவருடைய முதல் நாவல், 'பிரம்மசாரி'  என் நினைவில் இன்னும் பசுமையாக இருக்கிறது. பிறகு, 'காதலெனும் தீவினிலே'. மணிமேகலைப் பிரசுரம் மூல ஓவியங்களுடன்  அவருடைய படைப்புகளை வெளியிட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும்! 

=====

நாளிதழ்களின் முன்னோடி ஆசிரியர்கள் போன்று 20-ஆம் நூற்றாண்டில் வார இதழ்களில் புதுமை கண்டவர்களைக் குறிப்பிடுவதென்றால் "கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி, சாவி, எஸ்.ஏ.பி. அண்ணாமலை என்னும் மூவரைத்தான் முதலில் குறிப்பிடலாம். 

இவர்கள் படைப்பாளர்களாக இருந்ததுடன் புதிய வாசகர்களைப் படிக்கத் தூண்டி, பல எழுத்தாளர்களையும் அடையாளம் கண்டு வளர்த்தவர்கள். எஸ்.ஏ.பி.யின் தந்தையார் பெயர் பழனியப்ப செட்டியார். தாயார் லட்சுமி ஆச்சி. இவர் காரைக்குடியை அடுத்துள்ள கோட்டையூரில் 1924 -ஆம் ஆண்டு, டிசம்பர் 2-ஆம் தேதி பிறந்தார். எஸ்.ஏ.பி. ஆறுமாதக் குழந்தையாக இருக்கும்போதே தந்தையார் காலமாகிவிட்டார். 

எஸ்.ஏ.பி. அண்ணாமலைக்கு இளம் வயதிலேயே எழுத வேண்டும் என்னும் லட்சியம் இதயத்தில் கொழுந்துவிட்டது. எழுத்தாளராக வேண்டும் என்று தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாராம்.

ஒருநாள் அவருடைய மதிப்பிற்குரிய நண்பரும் உறவினருமான ஒருவர், ""ஏன் தம்பி, இப்படி சும்மா சொல்லிக்கொண்டே இருந்தால் எப்படி? கதை எழுதிப் பாருங்கள், ஏதாவது பத்திரிகைக்கு அனுப்புங்கள். பிரசுரமாகட்டும். நீங்கள் எழுத்தாளர் என்பது நாலு பேருக்குத் தெரிய வேண்டாமா?'' என்று அன்புடன் தூண்டினார். அந்த ஊக்கத்தால் "மளமள'வென்று மூன்று கதைகள் எழுதினார் எஸ்.ஏ.பி. இரண்டை "பிரசண்ட விகடன்' பத்திரிகைக்கும், ஒன்றை "சுதேசமித்திரன்' வார இதழுக்கும் அனுப்பினார். உடனே அவை பிரசுரமாயின.

அச்சில் பிரசுரமான கதைகள் எஸ்.ஏ.பி.யின் ஆர்வத்தை வளர்த்தன. கல்வியில் கவனம் செலுத்தி கல்லூரிப் படிப்பு முடித்துச் சட்டம் படித்துத் தேர்ந்த பிறகு அவருக்குள் மறைந்திருந்த எழுத்துத் தணல் ஊதப்பட்டு நெருப்பானது. சட்டக் கல்லூரியில் அவருடன் படித்த பி.வி.பார்த்தசாரதி, நாராயணன் ஆகிய இரு உயிர் நண்பர்களுடன் நாள்தோறும் புதிய பத்திரிகை ஒன்றைத் தொடங்குவதைப் பற்றியே ஆலோசித்தார்.

புதிய இதழ் தொடங்கும் திட்டம் முடிவானதும், தன் உறவினரையே பங்குதாரராகக் கொண்டு "தேவி அச்சகம்' என்னும் அச்சகத்தை விலைக்கு வாங்கினார் எஸ்.ஏ.பி. அச்சகம் மட்டுமே நடத்தும் நோக்கம் அவருக்கில்லை. அவருடைய லட்சியமான பத்திரிகை நடத்தும் ஆர்வத்தின் முதல்படி அது.

"குமுதம்' என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. தொடக்கத்தில் "கல்கி' இதழைப் போன்று மாதம் இருமுறை வெளியிடத் திட்டமிட்டனர். மதிப்பும், மரியாதையும் பத்திரிகைக்கு ஏற்பட்டு மக்கள் விலை கொடுத்து வாங்க வேண்டுமென்றால், நாடறிந்த பெரிய மனிதர் ஒருவரின் ஆதரவு இருப்பது நலமென்று எஸ்.ஏ.பி.க்குத் தோன்றியது. எஸ்.ஏ.பி.யின் பெரியம்மா கணவர் டாக்டர் அழகப்ப செட்டியாரை அணுகினார். அழகப்ப செட்டியார் "வள்ளல்' என்று புகழப் பெற்றவர். "வள்ளல்' மட்டுமல்லர்; கல்வியிலும், ஈகையிலும் வள்ளல் அவர்.

எஸ்.ஏ.பி., தான் தனித்துவமுள்ள மனிதனாகத் தலைநிமிர்ந்து வாழ ஆசைப்படுவதை விவரித்து, நான்கு பக்கங்கள் அழகப்ப செட்டியாருக்குக் கடிதம் எழுதினார். தான் புதிதாகத் தொடங்க இருக்கும் பத்திரிகைக்கு அவர் கௌரவ ஆசிரியராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கடிதத்தைப் படித்த அழகப்ப செட்டியார் மனம் நெகிழ்ந்து, எஸ்.ஏ.பி.யைக் கூப்பிட்டு அனுப்பினார். ""ஏற்கெனவே நிறைய பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கின்றன. நீ வேறு ஆரம்பித்தால் எப்படி நடக்கும்?'' என்று கேட்டார். நியாயமான கவலைதான்.

""மற்ற பத்திரிகைகள் மாதிரி இல்லாமல் நான் வித்தியாசமாக நடத்தப் போகிறேன்'' என்று எஸ்.ஏ.பி. உறுதியுடன் கூறினார்.

அழகப்பருக்கு அரைமனதுதான் என்றாலும், அந்த இளைஞரின் ஆர்வத்தையும் உள்ளொளியையும் புரிந்துகொண்டு ""சரி செய்'' என்று அனுமதி கொடுத்தார். இந்தச் செய்தியைத் தன் துணை ஆசிரியரிடம் எஸ்.ஏ.பி. சொன்னதாக நினைவு.

"குமுதம்' என்ற பெயர் சூட்டியாகிவிட்டது. சொந்த அச்சகம். போதிய பணவசதி இவை மட்டும் பத்திரிகை வெளியிடப் போதுமா? இதற்கு முன்பு பத்திரிகை நடத்திய அனுபவம் சிறிதுமில்லை. முதல் இதழை, அவர் பள்ளித் தோழர்கள் நாராயணன், ஆனந்ததீர்த்தன், சில எழுத்தாளர்கள் உதவியுடன் வெளிக்கொணர்ந்து விட்டார்.

எஸ்.ஏ.பி.யின் விடாமுயற்சி, தன்னால் முடியும் என்ற நம்பிக்கை, எழுத்தின் மீதுள்ள ஆர்வம் அவரை மகத்தான சாதனை புரிய வைத்தது. பிற்காலத்தில் விற்பனையின் உயர்வுக்கும், வடிவமைப்புக்கும், புதுமையான உள்ளடக்கம் தரும் புதுமைக்கும் மற்ற பத்திரிகைகள் "குமுதத்தைப் பார்' என்று பேசத்தொடங்கின.

"குமுதம்' வெற்றிக்கு, நிர்வாகத்தில் பெரும் பங்கு வகித்த பி.வி.பார்த்தசாரதியின் நட்புடன் கலந்த உழைப்பும் ஒரு காரணம். "ராமருக்கு லட்சுமணர் போல்' எஸ்.ஏ.பி.யின் லட்சியம் வெற்றிபெற பி.வி. பார்த்தசாரதி உதவினார் என்பது இலக்கிய உலகம் அறிந்த உண்மை.

இதழ் தயாரிப்பு ஒன்றையே சிந்தனையாகக் கொண்டு இரவு பகலாக உழைத்தார். புதிய புதிய பகுதிகளைக் கற்பனை செய்து ஒவ்வொரு பக்கத்தையும் தானே இருந்து எழுத்து எழுத்தாகப் பார்த்துப் படித்து "குமுதம்' என்னும் குழந்தையை வளர்த்தார். தொடக்க காலத்தில் எழுத்தாளர் சங்கம் போன்ற கூட்டங்களில் கலந்துகொண்டு நறுக்குத் தெறித்தாற்போல பேசுவது என்று வாசக மக்களிடையே தன் பெயரை நிலைநாட்ட விரும்பினார்.

1951-இல் மறுமலர்ச்சியுடன் மீண்டும் தொடங்கிய தமிழ் எழுத்தாளர்கள் சங்க நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டார். தன் மாநாடுகளின் வெற்றிக்குப் பாடுபட்டார். வரவேற்புக் குழுவில் சேர்ந்து உழைத்தார்.

விவேகானந்தரின் நூற்றாண்டு விழாக் கூட்டங்களுக்காகப் பல ஊர்களுக்குப் பேசச் சென்றார். "மிகச் சிறந்த பேச்சாளர்' என்று அவர் பெயர்பெறத் தொடங்கிய சமயம் திடீரென்று ஒருநாள் உதவி ஆசிரியர் ரா.கி.ரங்கராஜனிடம் ""இனிமேல் மேடைப் பேச்சுகளுக்குப் போகப் போவதில்லை'' என்று சொன்னார். ரா.கி.ரங்கராஜன் திகைத்தார். அதை "எஸ்.ஏ.பி.' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். எஸ்.ஏ.பி. அப்படியொரு முடிவுக்கு வரக்காரணம் -நான்தான்!

எஸ்.ஏ.பி. அத்தகைய முடிவெடுத்த சமயம்.. எஸ்.ஏ.பி.யை நான் இலக்கியக் கூட்டம் ஒன்றுக்குத் தலைமை வகிக்க அழைத்திருந்தேன். அறிஞர் பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை பேசிய கூட்டம். இரண்டரை மணி நேரம் திரிகூடசுந்தரம் பேசினார், பேசினார், பேசிக்கொண்டே இருந்தார். எஸ்.ஏ.பி. இருக்கையில் தவித்தார், நெளிந்தார், கைக்கடிகாரத்தைப் பார்த்தார், கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த என்னைப் பார்த்தார். கடுமை இல்லை; பரிதாபம் இருந்தது. இப்படியாகிவிட்டதே என்ற கவலை இருந்தது. ஒரு வழியாகத் திரிகூடசுந்தரம் பேசி முடித்ததும், தலைமை உரையை எஸ்.ஏ.பி. சுருக்கமாக இரண்டே வார்த்தைகளில் முடித்துக்கொண்டார்.

கூட்டம் முடிந்த பிறகு வழியனுப்ப வந்த என்னைத் தனியே அழைத்து, ""குமுதம் இப்போது வளர்ந்து வரும் பத்திரிகை. குறித்த நேரத்தில் எந்தப் பணியையும் செய்யும் வழக்கம் உடையவன் நான். எட்டரை மணிக்கு அலுவலகத்தில் இருந்து குமுதம் "பாரத்'தைச் சரி பார்த்து அச்சிடக் கொடுக்க வேண்டும். உதவி ஆசிரியர்கள் என்னைக் காணாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். கடமையிலிருந்து தவற ஒரு நாளும் நான் விரும்பமாட்டேன். பத்திரிகை அலுவலத்தில் ஒவ்வொரு நிமிடமும் பொன் போன்றது என்பது உங்களுக்குத் தெரியும். பொதுக் கூட்டத்தில் கிடைக்கும் கை தட்டலுக்காக என் லட்சியம், கடமை சிதைந்து விடக்கூடாது. தயவுசெய்து இனி என்னை எந்தப் பொதுக் கூட்டத்துக்கும் பேசவோ, தலைமை வகிக்கவோ அழைக்காதீர்கள்'' என்றார். என் கண்கள் கலங்கின. அப்போது அவர் சொன்னதை இறுதிவரைக் கடைப்பிடித்தார்; வென்றார். விற்பனையில் இந்தியாவின் முதல் இடத்தைப் பெற்றார்; இமாலய சாதனையை செய்து காட்டினார்.

குமுதத்தின் தொடக்க காலத்தில் அவர் விறுவிறுப்பாகத் தொடர்கதைகள் எழுதினார். நூல் வடிவில் வந்தபோது அதன் சுவை மிகவும் கூடியிருப்பது தெரிந்தது. காதலெனும், தீவினிலே, நீ, சித்தி, இன்றே இங்கு இப்போதே போன்ற தொடர்கதைகளை எழுதினார்.

காதலெனும் தீவினிலே புதினத்தைப் படித்த ஏவி.எம்.செட்டியார், திரைப்படமாக்கும் யோசனையைத் தெரிவித்தார். ஆனால். எஸ்.ஏ.பி., சில காரணங்களைக் கூறி, ஒருநாளும் திரைப்படத்துக்குக் கதை எழுதுவதில்லை என்று கூறிவிட்டார்

தன் மனைவியார் கோதை ஆச்சியின் மருத்துவ சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு சென்றதும் எஸ்.ஏ.பி.யின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரியும் தன் ஒரே மகன் ஜவகர் பழனியப்பன் பணியாற்றிவந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி காலமானார். அமெரிக்காவிலிருந்து அவரது உடலைச்சுமந்து மகனும் மனைவியும் சென்னை வந்தனர்.

ஓர் இலக்கிய எழுத்தாளர், பிறப்பிலேயே செல்வந்தர், கண்டிப்பு, நேர்மை, காலந்தவறாமை, ஒழுக்கம், வெற்றியிலிருந்து மாறுபடாமல் வாழ்ந்த அவரை படைப்புலகம், பத்திரிகை உலகம், வாசகர் உலகம் எப்படி மறக்கும்?

 [ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

எஸ். ஏ. பி. யும் (நன்றியுடன்) நானும் - கடுகு 

எஸ்.ஏ.பி.

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

1856. தி.ஜானகிராமன் - 8

'மோகமுள்'ளில் ஒரு  'முன்கதை'

தி.ஜானகிராமன் 

1961-இல் 'கல்கி'யில் "நாவல் பிறக்கிறது" என்று ஒரு தொடர் வந்தது. அதில் தி,ஜா. 'மோகமுள்' பற்றி எழுதிய கட்டுரையை  முதலில் இடுகிறேன் . 

என்ன காரணத்தாலோ 'சுதேசமித்திர'னில் தான் 'மோகமுள்' வந்தது என்று தி,ஜா. குறிப்பிடவில்லை.   'சுதேசமித்திர'னிலிருந்து மூன்று பேர்கள் நாலைந்து முறை  வந்து தொடர் எழுதக் கேட்டார்கள் என்று எழுதி இருக்கிறார்.

சுதேசமித்திரன் ஆசிரியர் ஸ்ரீநிவாசன் தி.ஜா.வின் ரசிகர்; அவர் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதன் பேரில் தான் ' மோகமுள்' எழுதப் பட்டிருக்கவேண்டும். ஆனாலும், அவர் வீட்டிற்கு நாலைந்து முறை விடாமல் படையெடுத்த மூன்று பேர்கள் யாரென்று அறிய எனக்கு ஆவலாய் இருக்கிறது. 

யார் அந்த மூன்று பேர்கள்?  யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்!  ( 'நீலம்' போன்ற உதவி ஆசிரியர்களாக இருப்பார்கள் என்பது என் யூகம்.)

கூடவே, 'சுதேசமித்திர'னில் 1956-இல் வந்த சில படங்களையும் இப்பதிவில் இணைத்திருக்கிறேன். மேலும், 'ஸாகர்' இந்தத் தொடரில்  வரைந்த பல படங்களை இங்குள்ள மூன்று பதிவுகளில் பார்க்கலாம்.

சில தொடர்களின் இடையே 'முன்கதை' என்று அவ்வப்போது சில இதழ்களில் வரும். இவை  பின்னர் வரும் நூல்களில்  இருக்காது! 

 முன்கதை எழுதுவதும் ஒரு கலை. 'முன்கதை'கள்  கதாசிரியரின் உள்ளத்தையும் கொஞ்சம் திறந்து காட்டும்! 'மோகமுள்' தொடரில் வந்த , தி.ஜா. எழுதிய ஒரு முன்கதையையும் இங்கே பதிவு செய்கிறேன்.

                                       




     




                                 

                                         


[ நன்றி: கல்கி, சுதேசமித்திரன், லக்ஷ்மி நடராஜன் ]


[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

தி.ஜானகிராமன்

ஸாகர்



புதன், 21 ஏப்ரல், 2021

1855. பாடலும் படமும் - 136

இராமாயணம் - 20
பால காண்டம் - 1


[ ஓவியம்: எஸ்.ராஜம் ]

எஸ்.ராஜம் வால்மீகி ராமாயண நூலிற்கு வரைந்த ஓவியங்களில் முதல் ஓவியத்தைப் பார்ப்போம். அதற்குப் பொருத்தமான கம்பனின் பாடல்களையும் பார்ப்போம். 

இந்த நூல் ( இரண்டாம் பதிப்பு)  கலைமகள் ஆசிரியர் நாராயணசாமி ஐயரால்   1958 -இல் வெளியிடப் பட்டது.  ( 1933-இல் வந்த முதல் பதிப்புக்கு ஓவியங்கள் வரைந்தவர் பிரபல ஆந்திர ஓவியர் கே.ராம்மோகன் சாஸ்திரி. அவ்வோவியங்களில் ஒன்று எனக்குக் கிட்டியுள்ளது. பின்னர் ஓர் பதிவில் இடுவேன்.   )

நூலின் அட்டைகளிலும் ராஜம் அவர்களின் 'கைவண்ணம்' !

[ ஓவியங்கள்: எஸ்.ராஜம் ] 

இந்த இரண்டாம் பதிப்பைத் தேடி நான் கலைமகள் காரியாலயத்திற்கு  ஒரு வருடம் கோடை விடுமுறையில் சென்னைக்குச் சென்றபோது, அது அச்சில் இல்லை என்று சொல்லித் தன் பிரதியை எனக்கு அன்பளிப்பாய்த் தந்தவர்  அமரர் 'லெமன்'  ( எஸ்.லக்ஷ்மணன்; முன்னாள் மஞ்சரி ஆசிரியர்; அமரர் சாருகேசியின் சோதரர் ) .




அந்த நூலில் மேலே உள்ள ராஜம் அவர்களின் படத்தின் அடியில் வால்மீகியின் இந்த ஸ்லோகம் காணப் படுகிறது.

ततो वै  यजमानस्य पावकादतुलप्रभम। 
                                   प्रादुर्भूतं   महद्भूतं  महावीर्यं   महाबलम।।


அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு: 
     
         (Then , from the fire of the sacrifice , arose a great being of matchless radiance and possessed of great valour and strength.)


இதைக் கூறும் கம்பனின் பாடல்கள்:

ஆயிடை. கனலின்நின்று. அம் பொன் தட்டம் மீத்
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று. - சூழ்
தீ எரிப் பங்கியும். சிவந்த கண்ணும் ஆய்.
ஏயென. பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே.

ஆயிடை   கனலின்  நின்று  -  அப்போது  அந்த  வேள்வித் தீயிலிருந்து;
தீ எரிப்பங்கியும் சிவந்த  கண்ணுமாய்  -  தீ எரிவது
போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக;
பூதம் ஒன்று - ஒரு   பூதமானது; 
அம்பொன்  தட்டம்  -  அழகிய  ஒரு பொன் தட்டத்தின் மேலே;
தூய சுதை நிகர் பிண்டம் ஒன்று - தூய்மையான அமுதத்தை  ஒத்த  ஒரு  பிண்டத்தை;
ஏந்தி  ஏயென எழுந்தது - தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது.

சுதை: அமுதம்.  பிண்டம்: சோற்றுத்திரள் (பொன்தட்டிலே  பாயசத்தை ஏந்தி அப்பூதம் வந்தது என்பது வான்மீகி கூற்று). பூதம்: தோற்றம்   என்னும் பொருள்   கொண்ட  வட  மொழிச்  சொல்லாம்.  )

வைத்தது தரைமிசை. மறித்தும் அவ் வழி
தைத்தது பூதம். அத் தவனும். வேந்தனை.
‘உய்த்த நல் அமிர்தினை; உரிய மாதர்கட்கு.
அத் தகு மரபினால். அளித்தியால்’ என்றான்.

பூதம்    தரை மிசை வைத்தது - (அவ்வாறு தோன்றிய) அந்தப்
பூதம்  அப்பொன்  தட்டத்தைத்  தரையின் மேல் வைத்தது;
மறித்தும் அவ்வழி  தைத்தது  -  திரும்பவும்   வந்த விதமே அந்த வேள்வித் தீயினுள் சென்று மறைந்தது;
அத்தவனும் உய்த்த நல்  அமிர்தினை- அந்தக்  கலைக்  கோட்டு முனிவனும் பூதம் கொடுத்த நல்ல  அமுதுப் பிண்டத்தை; 
உரிய    மாதர்கட்கு    -   உனக்குரிய பட்டத்து அரசியர்களுக்கு;
அத்தகு மரபினால் - மூத்தவள். இளையவள் என்ற முறைப்படியே;    
அளித்தியால்    என்றான்.-கொடுப்பாயாக என்று கூறினான்.

[ நன்றி : ஓவியம்- லலிதாராம் ]

 தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா 

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

1854. சத்தியமூர்த்தி - 22

சமூக சீர்திருத்தம் 2, 3, ஓட்டு உரிமை 2

எஸ். சத்தியமூர்த்தி 

1944-இல் ’சுதேசமித்திர’னில் வந்த மூன்று கடிதங்கள்.







பி.கு.

இந்தக் கடிதங்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எஸ்.நீலமேகம் ( இசை விமர்சகர் “ நீலம்”, சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் இருந்தார் ) . நூலாக முதலில் தமிழ்ப் பண்ணையும், பின்னர் கலைமகளும் வெளியிட்டன. 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சத்தியமூர்த்தி

திங்கள், 19 ஏப்ரல், 2021

1853. பாடலும் படமும் - 135

கலை மடந்தை



ரசிகமணி டி.கே.சி. மறைந்தபின், 1954-இல் வந்த படமும், பட விளக்கமும். ஓவியர் ஸ்ரீமதி கல்கியில் 40/50-களில்  வரைந்துள்ளார். ( அவரைப் பற்றி மேலும் அறிய இங்கே  படிக்கலாம். ) 




[ நன்றி: கல்கி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

1852. பி.எஸ்.ராமையா - 6

கம்பன் என்று ஒரு மானுடன்

       பி.எஸ்.ராமையா 








[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி.எஸ்.ராமையா 



வியாழன், 15 ஏப்ரல், 2021

1851. ரமண மகரிஷி - 4

நான் கண்ட உண்மை

டி.எஸ்.நாராயண ஐயர்


ஏப்ரல் 14. ரமணரின் நினைவு நாள். 




[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

புதன், 14 ஏப்ரல், 2021

1850. இன்று புதிதாய்ப் பிறந்தோம்: கவிதை

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

பசுபதி




"இன்று புதிதாய்ப் பிறந்தோம் – எம்
   எஞ்சிய வாழ்விற் கிதுவே முதல்நாள் ”
என்றே தினமும் உரைப்போம் ! – நம்
    யந்திர வாழ்வின் சுமையைக் குறைப்போம்!

துன்பத்தின் வேரைத் தகர்ப்போம் ! – நம்
   சோர்வை மறக்கக் கரங்கள் இணைப்போம் !
அன்பின் பெருமை உணர்வோம்! – எமை
   ஆளும் நெறியாய் அவிரோதம் ஏற்போம்!

பார்க்க ஒளிர்ந்திடும் யாவும் – பொற்
   பாளத் துகள்கள் எனவெண்ணல் வேண்டா!
தேர்வுகள் செய்திடக் கற்போம்! – நல்ல
   தேன்மலர் தேடிடும் வண்டுகள் போல!

முப்பால் தினமும் குடிப்போம்! – நம்
   முன்னோரின் நூல்களைப் பட்டாய் மதிப்போம்!
ஜப்பான் மொழியையும் கற்போம் – மேலைச்
   சாத்திரச் சாற்றை வாழ்வில் கலப்போம்!

மின்வான் தனிலே உலாவி – விண்
   மீன்கள் பறித்துத் தமிழில் பதிப்போம்!
வன்பால் சகத்தினை மாற்றி – நம்
   வாழ்வின் வளத்தைப் பெருக்குவோம் வாரீர்!

[ தினமணியில் 2016-இல் வந்த கவிதை ] 

தொடர்புள்ள பதிவுகள் :

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

1849. நாடோடி - 5

தலைவரே வருக! வருக!

நாடோடி





[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:


நாடோடி படைப்புகள்

திங்கள், 12 ஏப்ரல், 2021

1848. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 22

 ஸ்ரீ ராமர் பெருமை

வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி




1941-இல் திருச்சி வானொலியில் ஒலிபரப்பான உரை.



[ நன்றி: சுதேசமித்திரன்]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

1847. கஸ்தூரிபாய் காந்தி -2

அன்னை கஸ்தூரி
எம்.எல்.சபரிராஜன்




ஏப்ரல் 11. கஸ்தூரி பாய் காந்தியின் பிறந்த தினம்.

'சக்தி' இதழில் 1944-இல் வந்த கட்டுரை.







                                            








[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

கஸ்தூரிபாய் காந்தி