'மோகமுள்'ளில் ஒரு 'முன்கதை'
தி.ஜானகிராமன்
1961-இல் 'கல்கி'யில் "நாவல் பிறக்கிறது" என்று ஒரு தொடர் வந்தது. அதில் தி,ஜா. 'மோகமுள்' பற்றி எழுதிய கட்டுரையை முதலில் இடுகிறேன் .
என்ன காரணத்தாலோ 'சுதேசமித்திர'னில் தான் 'மோகமுள்' வந்தது என்று தி,ஜா. குறிப்பிடவில்லை. 'சுதேசமித்திர'னிலிருந்து மூன்று பேர்கள் நாலைந்து முறை வந்து தொடர் எழுதக் கேட்டார்கள் என்று எழுதி இருக்கிறார்.
சுதேசமித்திரன் ஆசிரியர் ஸ்ரீநிவாசன் தி.ஜா.வின் ரசிகர்; அவர் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதன் பேரில் தான் ' மோகமுள்' எழுதப் பட்டிருக்கவேண்டும். ஆனாலும், அவர் வீட்டிற்கு நாலைந்து முறை விடாமல் படையெடுத்த மூன்று பேர்கள் யாரென்று அறிய எனக்கு ஆவலாய் இருக்கிறது.
யார் அந்த மூன்று பேர்கள்? யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்! ( 'நீலம்' போன்ற உதவி ஆசிரியர்களாக இருப்பார்கள் என்பது என் யூகம்.)
கூடவே, 'சுதேசமித்திர'னில் 1956-இல் வந்த சில படங்களையும் இப்பதிவில் இணைத்திருக்கிறேன். மேலும், 'ஸாகர்' இந்தத் தொடரில் வரைந்த பல படங்களை இங்குள்ள மூன்று பதிவுகளில் பார்க்கலாம்.
சில தொடர்களின் இடையே 'முன்கதை' என்று அவ்வப்போது சில இதழ்களில் வரும். இவை பின்னர் வரும் நூல்களில் இருக்காது!
முன்கதை எழுதுவதும் ஒரு கலை. 'முன்கதை'கள் கதாசிரியரின் உள்ளத்தையும் கொஞ்சம் திறந்து காட்டும்! 'மோகமுள்' தொடரில் வந்த , தி.ஜா. எழுதிய ஒரு முன்கதையையும் இங்கே பதிவு செய்கிறேன்.
[ நன்றி: கல்கி, சுதேசமித்திரன், லக்ஷ்மி நடராஜன் ]
[ If you have trouble reading some of the images, right click on each such image , choose 'open image in a new tab' , then in the new tab , use browser's zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read. ]
தொடர்புள்ள பதிவுகள்:
தி.ஜானகிராமன்
6 கருத்துகள்:
மிக மிக நன்றி ஜி.
இதுவரை இந்த கதைக்கு முன் கதை
என்ற எழுத்து எவ்வளவு முக்கியம்.
அதை இத்தனை அருமையாகப் பதிந்திருக்கிறீர்கள்.
மிக மிக லாவகமான எழுத்துக்குரியவர், தி.ஜானகிராமன்.
மனதோடு பேசும் அவர் எழுத்துக் குரியவர்.
பார்க்க, படிக்க பிரமிப்பாக இருக்கிறது. கருவூலம் என்று சொல்வார்களே, அதுவே இது தான், இது தான், இதுவே தான்! எங்கள் பார்வைக்குக் கொடுத்தமைக்கு நன்றி, ஐயா.
எத்தனைமுறை படித்தாலும் சலிக்காத எழுத்து!
மோகமுள் எத்தனை முறை படித்திருப்பேனோ...கணக்கில்லை. சுதேசமித்திரனில் அது தொடராக வந்தது என்பது நானறியா செய்தி. கடைசி படத்தில் ரங்கண்ணாவின் படம் திஜரா வர்ணித்தது போலவே உள்ளது. "சிங்கம் போல அவர் முகம்" என்று வர்ணிப்பார். அதை மனதில் கொண்டு தத்ரூபமாக வரைந்திருக்கிறார். இன்னமும் நிறைய படங்கள் கிடைத்தால் பதிவிட வேண்டும் என்று வேண்டுகிறேன்.
@b.n.kapali "தொடர்புள்ள பதிவுகள்' என்று நான் இட்ட ''ஸாகர்" என்ற சுட்டியில் நிறைய படங்கள் உள்ளன. இந்தப் பதிவின் முன்பகுதியிலும் அவற்றைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேனே? நீங்கள் படிக்கவில்லையா?
நன்றி ஸ்ரீ.பசுபதி அவர்களே. website களை பயன்படுத்தவோ,blogs களை முறையோடு வரிசைகிரமமாக படிப்பதிலோ நான் தேர்ச்சி பெற்றவனல்லன். தத்துபித்தென்று எதையோ click செய்வேன். என்னமோ வரும். எனக்கு நல்ல விஷயங்கள் கிடைப்பதென்பது லாட்டரி போல்தான். எனவே நல்ல விஷயங்கள் பலவும் நான் miss பண்ணியிருக்க வாய்ப்புண்டு. இன்னமும் எனக்கு இவையெல்லாம் பிடிபடவில்லை.
கருத்துரையிடுக