புதன், 26 ஜனவரி, 2022

2014.பாடலும் படமும் - 142

 தொழுதிடல் மறக்கிலோமே! 

[  ஓவியம்: கனு தேசாய் ]

'கல்கி' குடியரசு மலரில் (1950) வந்த முகப்புப் படமும், பட விளக்கமும் .

=====

தேவி! இன்று நீ அருள் புரிந்துவிட்டாய். உன் அருள் பெற்ற நாங்கள் அடையும் பேரானந்தம் சொல்லி முடியாது. இவ்வளவு கருணை கூர்ந்து அருள் புரிந்தமைக்காக உன்னை வணங்குகிறோம். 

ஆனாலும் நீ அருள் புரிவதற்கு முன் எங்களை எத்தனை ஆண்டுகள் எப்படி எப்படி எல்லாம் சோதித்தாய்! எங்கள் உயிருக்குயிரான தலைவர்களைச் சிறையில் வாடி மெலியச் செய்தாய்! எங்கள் கண்ணுக்குக் கண்ணான தூயோர்களை நாடு கடத்தி நலியச் செய்தாய். அந்தச் சோதனைக் காலத்தில் அவர்கள்

இதந்தரு மனையின் நீங்கி
   இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
   பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
   விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
   தொழுதிடல் மறக்கி லேனே!

என்று உறுதி கூறி வந்தது எங்கள் மகாகவி பாரதியின் அமுதவாக்கில் வெளியாகி யிருக்கிறது. அத்தகைய மகான்களின் தவ வலிமையினாலேதான் இன்று உன் அருள் பெற்றோம். பாரதக் குடியரசு உதயமாகும் இந்த நன்னாளில் மற்றும் ஒரு முறை அந்த மகா கவியின் வாக்கைக் கூறி உன்னை வணங்குகிறோம்.

" சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலோமே! "  

 
தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா 

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: