பொன்னியின் செல்வன்-1: பாகம் 1
பூர்வ கதை எழுதும் கலை
தொடர்கதை எழுதுவதே ஒரு கலை என்றால், தான் எழுதிய தொடரின் கதைச் சுருக்கத்தை அவ்வப்போது எழுதி, படிப்போரின் கவனத்தைச் சிதற விடாமல், புதிய வாசகரையும் தொடர்ந்து படிக்க ஈர்ப்பதும் இன்னொரு கலை. தொடர் நூலாய் வெளிவரும்போது, பெரும்பாலும் இந்த முன்கதைச் சுருக்கங்களை நீக்கிவிடுகிறார்கள். இது ஒரு பிழை என்பது என் கருத்து. இந்தக் கதைச் சுருக்கங்கள் ஆசிரியர் தொடரை எப்படிக் கொண்டு போக நினைக்கிறார், அவ்வப்போது எப்படிக் கதையில் திருப்பங்கள் அமைக்கிறார், பாத்திரங்களுக்கு அவர் கொடுக்கும் மதிப்பு, அவருடைய எழுத்தாற்றல் போன்ற பலவற்றை மிக அழகாக நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
எடுத்துக் காட்டாக, கல்கி 'பொன்னியின் செல்வ'னில் எழுதிய பூர்வ கதைப் பகுதிகள் சிலவற்றை, ஒவ்வொரு பாகமாகப் பார்ப்போம். முதலில் விவரமாக எழுதப்பட்ட பகுதியைப் பின்னர் ஆசிரியர் எப்படிச் சுருக்குகிறார் என்பதைப் படிக்கும்போதே நமக்கு வியப்பு மேலிடும்! கதை எழுதும் கலையையும், ஆசிரியரின் மனவோட்டத்தையும் சிறிது புரிந்து கொள்வோம்!
தொடங்குவோமா?
முதல் பாகத்தின் முதல் எட்டு அத்தியாயங்களின் சுருக்கம்:
அடுத்து, 17 அத்தியாயங்களின் சுருக்கம். முதலில் எழுதிய பூர்வ கதையை எப்படிச் சுருக்குகிறார் என்று கவனியுங்கள்! இரண்டும் ஒரே பக்கம் தான்!
பின்னர் அதே ஒரு பக்கத்துக்குள் 28 அத்தியாயங்களைச் சுருக்குகிறார்!
கடைசியில், முதல் பாகத்தின் 57 அத்தியாயங்களைச் மூன்று பக்கங்களில் சுருக்குகிறார்!
முதல் பாகத்தில் இடையே வந்த சில பூர்வ கதைகளை, கல்கியின் எழுத்தாற்றலுக்குக் காட்டாக, விரிவாகப் பார்த்தோம்! அடுத்த பதிவுகளில் முழு பாகச் சுருக்கங்களை மட்டும் பார்ப்போம்.
[ நன்றி: கல்கி ]
தொடர்புள்ள பதிவுகள்:
கல்கி
If you are already a Follower of my blog , thanks for reading!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக