ஞாயிறு, 16 அக்டோபர், 2022

2271. பாடலும் படமும் - 151

மாலைப் பொழுதினிலே : வேலன் பாடல்


பாடலாசிரியர் பெயர் இல்லாமல் இந்தப் பாடல் 'கல்கி' இதழின் முதல் தீபாவளி மலரில் (1942) மணியத்தின் ஓவியங்களுடன் வெளியானது. 



பின்னர், எஸ்.வி.வெங்கடராமன் ( "மீரா" புகழ்) இசையில், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பாடிய இசைத்தட்டில் எல்லோர் மனங்களையும் கவர்ந்தது இந்தப் பாடல். 



மாலைப்பொழுதினிலே….ராகமாலிகை.


ராகம்: செஞ்சுருட்டி

மாலைப் பொழுதினிலே --ஒரு நாள் 
மலர்ப் பொழிலினிலே    
கோலக் கிளிகளுடன் --குயில்கள்   
கொஞ்சிடும் வேளையிலே  
                                                                                                                
மாலை குலவு மார்பன்--- மறுவில் 
மாமதி போல் முகத்தான்   
வேலொன்று கையிலேந்தி ---என்னையே    
விழுங்குவான் போல்  விழித்தான்  

ராகம்: பெஹாக்
                                                                                         
நீலக் கடலினைப்போல் - என் நெஞ்சம் 
நிமிர்ந்து பொங்கிடவும் 
நாலு புறம் நோக்கி--- நாணி நான்     
“யாரிங்கு வந்த” தென்றேன்    
                                             
"ஆலிலை மேல் துயின்று ---புவனம்    
அனைத்துமே அளிக்கும்   
மாலின் மருமகன் யான்--- என்னையே   
வேலன் முருகன் என்பார்"


ராகம்: சிந்துபைரவி


சந்திரன் வெள்குறும் உன் - முகத்தில்  
சஞ்சலம் தோன்றுவதேன்?      
தொந்தம் இல்லாதவளோ ---புதிதாய்     
தொடர்ந்திடும் உறவோ?   

முந்தைப் பிறவிகளில் - உனை நான்                                     
முறையினில் மணந்தேன்     
எந்தன் உயிரல்லவோ ----கண்மணி   
ஏனிந்த ஜாலம்?" என்றான்
 

ராகம்: மோஹனம்  

உள்ளம் உருகிடினும் ---உவகை    
ஊற்றுப் பெருகிடினும்                                                            
கள்ளத்தனமாகக் ---கண்களில்   
கனல் எழ விழித்தேன்

புள்ளி மயில் வீரன் ----மோகனப்                                                  
புன்னகை தான் புரிந்தான்    
துள்ளி அருகில் வந்தான்-- என் கரம்     
மெள்ளத் தொடவும் வந்தான்


ராகம்: மாயாமாளவகௌளை

பெண் மதி பேதைமையால் --அவன் கை   
பற்றிடுமுன் பெயர்ந்தேன்     
கண் விழித்தே எழுந்தேன் ---துயரக்                                            கடலிலே விழுந்தேன்! 

வண்ண மயில் ஏறும் -பெருமான்
வஞ்சனை ஏனோ செய்தான்?
கண்கள் உறங்காவோ -அக்குறைக்
கனவைக் கண்டிடேனோ? ( மாலைப் )

 பாடல் இங்கே:

Malai Pozhuthinile


இந்தப் பாடலைப் பற்றிய சில சுவையான தகவல்கள்:

பாடலைத் தீபாவளி மலரில் படித்த டி.கே.சி , உடனே ஒரு பாராட்டுக் கடிதம் எழுதி, 'யாருடைய பாடல் அது?" என்று கேட்டு , அதை 'கல்கி' இதழுக்கு அனுப்பினார். அதுவும் பிரசுரமானது ; ஆனால் பதில் இருக்கவில்லை!

'கல்கி' தனியாகப் பதிலை டி.கே.சி. க்கு ஒரு கடிதம் மூலம் தெரிவித்தார். டி.கே.சி.யோ அந்த மர்மத்தை 45-ஆம் ஆண்டு 'கல்கி' இதழ் ஒன்றில் உடைத்தார்! அந்தக் கட்டுரை இதோ !




தொடர்புள்ள பதிவுகள்:


பாடலும், படமும்

பாடலும்படமும் : 1  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

1 கருத்து:

RSR சொன்னது…

What a wonderful writeup by TKC Mudaliyaar!
Real 'rasikamaNi'.