“ கல்கியின் தமிழ்ப் பற்றும் இசைப் பிரேமையும் அவருடைய ரசிகத்தனமையும் ஒன்று சேர்ந்துதான் பாடல்களாக வெளிப்பட்டன. அநேகம் பாடல்கள், ஏற்கனவே அமைந்த மெட்டுக்குள் பொருந்தும்படி எழுதப்பட்டவை. ‘பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்’ என்ற பாட்டு, சைகால் பாடிய ஹிந்திப் பாட்டின் மெட்டுக்குள் அப்படியே பிசகாமல் பொருந்தும். இந்தப் பாடலை கல்கி எழுதியதும், நான் அதை முதன்முதலில் பாடியதும், பின்னர் அது இசைத்தட்டாக வெளியாகி அமோக வரவேற்பு பெற்றதும் பசுமையாக ஞாபகமிருக்கிறது. ‘பூங்குயில் பட்டமாள்’ என்று எனக்கொரு இனிய பட்டமும் வாங்கிக் கொடுத்தது இப்பாடல்! அழகான , எளிமையான தமிழ்; வெறும் வார்த்தையால் பாடலை வளர்க்காமல் காட்சி விவரணை மூலம் கதை சொல்லிக் கொண்டு போவது - இவை கல்கி பாடல்களின் முத்திரை.”
[ நன்றி : அமரர் கல்கி பாடல்கள், வானதி பதிப்பகம், டிசம்பர் 2003 ]
டி.கே.பட்டம்மாள் கச்சேரியில் பாடுவதற்கென்றே ‘கல்கி’ அவரிடம் நான்கு பாடல்கள் எழுதிக் கொடுத்தார். அவை : 1)குழலோசை கேட்டாயோ -கிளியே 2) பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள் 3) திரைகடல் தூங்காதோ 4) இன்பக் கனவொன்று துயிலினில் கண்டேன். இவை 1940-களில் இசைத்தட்டுகளாகவும் வெளிவந்தன. டி.கே.பட்டம்மாள் திரைப்படங்களில் பாடியுள்ள பாடல்களையும் பலர் அறிவர். முதன் முதலில் எஸ்.எஸ்.வாசன் ’தியாகபூமி’யில் அவரைப் பாட அழைத்தபோது, டி.கே.பட்டம்மாள் போட்ட ‘கண்டிஷன்’ என்ன? அவரே சொல்லட்டும்! ”சினிமாவில் பாடுவதற்கு ஜெமினி நிறுவனத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. வாசன் அவர்கள் தான் என்னை வரவேற்று உபசரித்தார். “எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நீங்களும் பாட்டுப் பாட வேண்டும். வருகிறீர்களா? “ என்று கேட்டார். ”மிகவும் மகிழ்ச்சி” என்று சம்மதம் தெரிவித்ததோடு “ஒரேயொரு கண்டிஷன்” என்றேன். “என்ன” என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தார் வாசன். “சினிமாவின் டூயட் பாடல்கள் பாடுவதில் எனக்கு விருப்பமில்லை. தேசபக்தி மற்றும் பொதுவான பாடல்கள் பாடுகிறேன்” என்று சொன்னேன். வாசனும் சந்தோஷமாகத் தலையசைத்தார். அதன்பின் ‘தியாகபூமி’, ‘மிஸ் மாலினி’ உட்பட சில படங்களில் பாடியிருக்கிறேன்” [ நன்றி : அமரர் வாசன் நூற்றாண்டு மலர், விகடன், 2004] ( பின் குறிப்பு: ‘மிஸ் மாலினி’க்காக டி.கே.பி ‘ஸ்ரீ ஸரஸ்வதி நமோஸ்துதே’ என்ற பாடலைப் பாடினார். ஆனால், வாசன் கடைசியில் அதைப் படத்தில் பயன்படுத்தவில்லை! ஏனென்றால் மாலினி என்ற அந்த பெண்மணியின் திரைப்படக் குணசித்திரப்படி அவள் அவ்வளவு அழகாக ஒரு பாடலைப் பாடி இருக்கமுடியாது என்று முடிவு செய்தார் ! இது ராண்டார் கை ஒரு கட்டுரையில் கொடுத்த தகவல்! ) ‘தியாகபூமி’ படத்தில் ‘கல்கி’ யின் ‘பாரத புண்ணிய பூமி ‘, 'தேச சேவை செய்ய வாரீர்’, ‘பந்தம் அகன்று’ ஆகிய மூன்று பாடல்களையும் டி.கே.பட்டம்மாள் பாடியிருக்கிறார். இதோ இன்னும் சில திரையுலகப் பாடல்கள் பற்றிய தகவல்கள்:
டி.கே.பட்டம்மாள் சங்கீத சங்கதிகள் DKPATTAMMAL-FILM-SONGS |
ஞாயிறு, 6 ஏப்ரல், 2014
சங்கீத சங்கதிகள் - 34
வியாழன், 27 மார்ச், 2014
சங்கீத சங்கதிகள் - 33
டி.கே.பட்டம்மாள் -1
டி.கே.பட்டம்மாளைப் பற்றி எழுதப்பட்ட பல கட்டுரைகளிலேயே இன்றும் உயிருடன் துடிப்பவை ‘கல்கி’யின் விமர்சனங்களே! ’கல்கி’ யின் பாடல்களை முதலில் கச்சேரிகளில் பாடிப் பிரபலப் படுத்தியவர் பட்டம்மாள் அவர்கள் தான் என்பதையும் குறிப்பிடவேண்டும். அவை இசைத்தட்டுகளாகவும் பிறகு வந்தன.
முதன் முதலாக 1936-இல் அவருடைய கச்சேரியைக் கேட்ட ‘கல்கி’ விகடனில் இப்படி எழுதினார் :
அகாடமி, காங்கிரஸ் காட்சி இரண்டிலும் , இளம் பாடகர்கள் பலர் இம்முறை கச்சேரி செய்தனர். அவர்களில் எல்லாம் மிகச் சிறந்த பெயர் வாங்கியவர் ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள்.
சென்ற மாதத்தில் முதன் முதலாக ஜகந்நாத பக்த சபையில் இவருடைய கச்சேரி கேட்டேன். ”இவ்வளவு நன்றாகப் பாடுகிறாரே: இதுவரை நாம் கேட்டதில்லையே “ என்று வியப்பு உண்டாயிற்று. முன்னணி வித்வான்களைப் போல் சவுக்க காலத்தில் பெரிய பெரிய தீக்ஷிதர் கீர்த்தனங்களை எல்லாம் அழுத்தமாகவும் பிடிப்புடனும் பாடுகிறார். வித்வத்துடன் குரல் இனிமையும் சேர்ந்திருக்கிறது அதனால் கச்சேரி செய்யும்போது விகாரப் படுத்திக் கொள்ளாமல் புன்னகை தவழும் முகத்துடன் பாடுதல் சாத்தியமாய் இருக்கிறது. வருங்காலத்தில் இவருடைய பெயர் பெரிதும் பிரசித்தி அடையும் என்று எதிர்பார்க்கிறேன்”
( நன்றி : பொன்னியின் புதல்வர், “சுந்தா” )
பிறகு 4-1-1936 - இல் ‘கல்கி’ விகடனில் விரிவாக எழுதிய ஒரு கட்டுரை மேலும் டி.கே.பட்டம்மாளுக்குப் புகழாரம் சூட்டியது.

பட்டம்மா பாட்டு
‘கர்நாடகம்’ ( கல்கி )
|
வியாழன், 20 மார்ச், 2014
பி.ஸ்ரீ -6 : சித்திர ராமாயணம் -6
365. வானுற ஓங்கிய தன்னம்பிக்கை
பி.ஸ்ரீ
பி.ஸ்ரீ. ஆச்சார்யாவுக்கும் ‘ஆனந்தவிகட’னுக்கும் நெடுநாள் தொடர்பு உண்டு. 1930- இல் தொடங்கிய அந்த அனுபவங்களைப் பற்றிப் பி. ஸ்ரீயே “நான் அறிந்த தமிழ்மணிகள்” என்ற நூலில் விவரமாய்ச் சொல்லியிருக்கிறார்.
சட்டக் கல்லூரியில் படித்து வந்த பி.ஸ்ரீயின் சகோதரர் ஏ.என்.மகரபூஷணம் மூலமாகத் தான் ‘கல்கி’யின் நட்புக் கிடைத்தது பி.ஸ்ரீக்கு. பிறகு வாசனின் நட்பும் கிட்டியது. முதலில் கல்கி அவரை விகடன் ஆண்டுமலர் ஒன்றில் ஓர் இலக்கியக் கட்டுரை எழுதும்படி கேட்டுக் கொண்டார். பி.ஸ்ரீ ’குற்றாலக் குறவஞ்சி’யில் வரும் குறிகாரியான குறத்தியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார்; பத்து ரூபாய் சன்மானமும் கிடைத்தது! பிறகு, ஆழ்வார்களைப் பற்றி” திவ்யப்பிரபந்த சாரம்”, வியாச பாரதத்திலிருந்து கதைகள், நாயன்மார்களைப் பற்றிச் “சிவநேசச் செல்வர்கள்” , “கம்ப சித்திரம்” என்ற தலைப்பில் கம்ப ராமாயணக் கட்டுரைகள் எழுதினார். இக் கட்டுரைகளைப் பொதுமக்கள் பாராட்டியதால் , “சித்திர ராமாயண’க் கட்டுரைகளை பல வருடங்களாக எழுத பி.ஸ்ரீக்கு இன்னொரு வாய்ப்புக் கிட்டியது.
பேராசிரியர் 'கல்கி' பி.ஸ்ரீ அவர்களைவிட வயதில் சிறியவர். இருந்தாலும், 1938-இல் வெளியான பி.ஸ்ரீ -யின் " திவ்ய பிரபந்த ஸாரம்" என்ற நூலுக்கு கல்கியை முன்னுரை வழங்கும்படி கேட்டுக் கொண்டார் பி.ஸ்ரீ.
அந்த முன்னுரையிலிருந்து ஒரு பகுதி { நன்றி: பொன்னியின் புதல்வர், சுந்தா ]
" இந்தப் புத்தகத்தில் தொகுத்து வெளியிட்டிருக்கும் திவ்வியப் பிரபந்தக் கட்டுரைகள் ஆனந்த விகடனில் பிரசுரமாகிக் கொண்டு வந்தபோது, ஒரு நண்பர், "இந்த ஆழ்வார் கட்டுரைகளை யாராவது படிக்கிறார்களா? " என்று கேட்டார். "படிக்காமற் போனால், ஆழ்வார்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை" என்று பதில் சொன்னேன். "
சரி, கிஷ்கிந்தா காண்டத்தின் அடுத்த பகுதியைக் காண்போமா?

மகேந்திர மலையின் மீது, பேருருவம் கொண்ட அனுமன் கடலைத் தாண்டத் தயாராக நிற்கிறான்.
365. வானுற ஓங்கிய தன்னம்பிக்கை
பி.ஸ்ரீ
[ If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's zoom facility to increase the image size also, can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
[ நன்றி ; விகடன் ]
தொடர்புள்ள முந்தைய கட்டுரைகள்;
360. தமிழகத்தில் ராமதூதர்கள்
361. புதிய நண்பன்
362. வானரர் கற்ற வைத்திய பாடம்
363. கழுகு மகராஜா
364. முகஸ்துதியா , சக்தி ஸ்துதியா?
பி. ஸ்ரீ படைப்புகள்
(தொடரும்)
தொடர்புள்ள முந்தைய கட்டுரைகள்;
360. தமிழகத்தில் ராமதூதர்கள்
361. புதிய நண்பன்
362. வானரர் கற்ற வைத்திய பாடம்
363. கழுகு மகராஜா
364. முகஸ்துதியா , சக்தி ஸ்துதியா?
பி. ஸ்ரீ படைப்புகள்
(தொடரும்)
செவ்வாய், 11 மார்ச், 2014
எஸ். எஸ். வாசன் - 1
எங்கள் ஆசிரியர்
கொத்தமங்கலம் சுப்புமார்ச், 10, 1903. எஸ்.எஸ். வாசன் அவர்களின் பிறந்த நாள்.
அவர் நினைவில், கொத்தமங்கலம் சுப்பு விகடனில் 1969-இல் எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன்.
"கொத்தமங்கலம் சுப்பு ஒரு குழாய்; அதைத் திறந்து விட்டால், கற்பனை
கொட்டும் என்று மாலி கூறினார். அதனால், உங்களை
மாசம் 250 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு
வைத்துக் கொள்கிறேன்" என்றார் வாசன்.
அன்பர் பி.எஸ்.ராமையாவும் நானும் 'மதன காமராஜன்' படத்தில் உழைக்கத் துவங்கினோம். வாசனின் மேதாவிலாசத்தை அந்தப் படத்திலேயே கண்டேன்.
'இந்தப் படத்தில் மொத்தம் 31 கரகோஷங்கள்
கிடைக்கும்' என்று மதிப்பிட்டார் வாசன். படத்தை முடித்து ஸ்டுடியோவில் பலர் முன்னிலையில் போட்டுக்
காட்டியதில்,
30 கரகோஷங்கள் தான் கிடைத்தன; மீதி ஒன்று எதனால் விட்டுப்போனது என்று ஆராய்ந்தார். அதைக் கண்டு பிடித்து, அந்தக்
காட்சியை மறு படியும் டி.எஸ்.துரைராஜ் அவர் களைக் கொண்டு 'ரீ டேக்' எடுத்துப்
பிறகு போட்டுக் காட்டினார். 31 கரகோஷங்களும் கிடைத்தன. 'ஒரு கரகோஷத்திற்கா இந்தப் பாடு' என்று எல்லோரும்
எண்ணினார்கள். ஆனால், அந்த ஒரு கரகோஷத்தின்
வசூல் ஒரு லட்சம் என்பது அவருக்குத் தெரியும்.
வேலை என்று வந்துவிட்டால், சொந்த சுகங்கள் எல்லாம் பறந்து விடும். பல இரவுகளில் ஷூட்டிங் மும்முரத்தில் வெறும் ரொட்டியைத் தின்றுவிட்டுப் படம் எடுப்
பார். அதிலும், 'சந்திரலேகா' படப்பிடிப்பின்போது அவர் பட்டபாடு சொல்லத் தரமன்று.
ஸ்டுடியோவில் மூலைக்கு மூலை
யானைகளும் குதிரைகளும் கட்டிக்கிடக்கும். அகழிகளின் அருகில் காவலர்கள் நிற்பார்கள். எங்கு பார்த்தாலும் அரண்மனைகளாக
இருக்கும். அந்தப்புரப் பணிப் பெண்கள் அங்கும் இங்கும் ஓடிக்
கொண்டிருப்பார்கள். போர்ட்டிகோக்களில் அரண்மனைக்
கோச்சுகளும், 'நான்கு குதிரை சாரட்'டுகளும்
நிற்கும். 'மெஸ்'ஸிலிருந்து அரண்மனைச் சமையல் மணம்
வந்துகொண்டே இருக்கும். வாத்தியக்காரர்களும் சங்கீத
வித்வான்களும் கொண்ட ஜெமினி ஆர்கெஸ்ட்ரா முழங்கிக்கொண்டே
இருக்கும். 'நம்பர் ஒன்' ஸ்டுடியோவில்
ஜெர்மன் மாது ஒருத்தி 100
நாட்டிய வனிதைகளை ஆட்டி வைத்துக்கொண்டு இருப்பாள். ஆயுத
சாலைகளில் கத்திகள் தயார் ஆகும்.
ஸ்டன்ட் வீரர்களும், ரஞ்சன், ராதா, சியாம்சுந்தரும், சோமுவும் வாட்போர் நடத்திக் கொண்டே இருப்பார்கள். ஜெமினி ஸ்டுடியோவே ஒரு பெரிய
சமஸ்தானமாகக் காட்சி அளிக்கும். ஆனால், 'எங்கே அந்த சமஸ்தான மன்னர்? ராஜா எங்கே?' என்று கேட்டால், ஒரு தொளதொளத்த கதர் சட்டையையும், அதன் மேல்
மூன்று முழத் துண்டையும் போட்டுக் கொண்டு, அவர்
எங்கும் இருப்பார்.
புதிதாய் அமர்த்திய தொழிலாளர்கள் சிலர் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தார்கள்... "எங்கே தம்பி, முதலாளி? இதைப் பார்க்கவே வரமாட்டேங்கறாரே?"
"பட முதலாளி இல்லியா... எத்தினியோ வேலை இருக்கும்!"
இவ்வாறு பேசிக்
கொண்டிருக்கும் அவர்களுக்குத் தங்கள் அருகில் நிற்கும் எளிய மனிதர் தான் முதலாளி
என்பது தெரியவில்லை. அந்த முதலாளிக்கும், "நான்தான் உங்கள் முதலாளி" என்று சொல்லத் தோன்றவில்லை. ஏன் என்றால், தான் முதலாளி என்ற எண்ணமே அவருக்கு ஒரு நாளும் தோன்றியதில்லை. [ நன்றி : விகடன் ]
தொடர்புள்ள பதிவுகள்;
’கல்கி’ பற்றி வாசன்
எஸ்.எஸ்.வாசன்
கொத்தமங்கலம் சுப்பு
ஞாயிறு, 9 மார்ச், 2014
பி.ஸ்ரீ -5 : சித்திர ராமாயணம் -5
364. முகஸ்துதியா, சக்தி ஸ்துதியா?
பி.ஸ்ரீ
“ கம்பனின் இசைச் செல்வத்தை நாளதுவரை யாரேனும் முழுவதும் கண்டுவிட்டதாகச் சொல்லமுடியுமா? இசைக்கு அடுத்தபடியாக மனோபாவந்தான் கவிஞனுக்கு மூலதனம். அந்த மூலதனம் இல்லாமல் --கவிக்கடை போடுவதெல்லாம் வீண்முயற்சியே. கம்பனது மனோபாவம் ( imagination) பல்வேறு வடிவங்களைக் கொண்டு ஒரு அற்புத சித்திரசாலையைப் படைத்திருக்கிறது. எனவேதான் இதைக் ’கம்பசித்திரம்’ என்கிறோம். இதற்கு மேலாக கம்பனிடம் நாம் காண்பது நாடகப் பண்பு. “கம்ப நாடகம்” என்று மணவாள மாமுனிகள் கூறுவது சிந்திக்கத் தக்கது. இவற்றையெல்லாம் உற்று நோக்கும்போதும், ஊடுருவிப் பார்க்கும்போதும் நமக்குத் தோன்றுவதுதான் என்ன?
இது மொழிபெயர்ப்புமன்று. சார்பு நூலுமன்று. “முதல் நூல்” என்றே முடிவு கட்டத்தக்க இலக்கிய படைப்புத்தான் கம்பராமாயணம் “
--பி.ஸ்ரீ,ஆசாரியா, சரசுவதி ராமநாதன்,
“ கம்பன் கலைக்கோயிலுக்கு ஒருகைவிளக்கு “ என்ற நூலில்.
சரி, நம் “சித்திர ராமாயண”ப் பயணத்தில் பி. ஸ்ரீ-யின் அடுத்த கட்டுரையைப் பார்ப்போமா? ஜாம்பவான் அனுமனின் சக்தியைப் புகழ்ந்து பேசும் கட்டம்.
ஒரு குறிப்பு: சரியாக, 70 -ஆண்டுகளுக்கு முன் ( ஆம், 1944 -இல் ) விகடனில் தொடங்கப்பட்ட இத் தொடரில் முதலில் ஆர்ட் டைரெக்டர், ஓவியர் ‘சேகர்’ தான் ஓவியங்களை வரைந்தார் . பிறகு தான் ‘சித்திரலேகா’வின் ஓவியங்கள்.)
======
தொடர்புள்ள முந்தைய கட்டுரைகள்:
360. தமிழகத்தில் ராமதூதர்கள்
361. புதிய நண்பன்
362. வானரர் கற்ற வைத்திய பாடம்
363. கழுகு மகராஜா
பி. ஸ்ரீ படைப்புகள்
( தொடரும் )

[ நன்றி: விகடன், படம்: சித்திரலேகா ]
[ If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's zoom facility to increase the image size also, can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
360. தமிழகத்தில் ராமதூதர்கள்
361. புதிய நண்பன்
362. வானரர் கற்ற வைத்திய பாடம்
363. கழுகு மகராஜா
பி. ஸ்ரீ படைப்புகள்
( தொடரும் )
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)