திங்கள், 3 செப்டம்பர், 2012

ரா.கி.ரங்கராஜன் - 3: என் முதல் கதை!

என் முதல் கதை!
ரா.கி.ரங்கராஜன்


பிரபல எழுத்தாளர்களின் முதல் படைப்புகள்  எவை? என்று கண்டு பிடிப்பதே ஒரு தனிப்பட்ட சுவை நிறைந்த ஆய்வு. உதாரணமாக, 'கல்கி'யின் முதல் சிறுகதை 'விஷ மந்திரம்' என்பார்கள். சாண்டில்யனின் முதல் கதை ' சாந்தசீலன்'.ஜெயகாந்தனின் முதல் சிறுகதை  ‘பிச்சைக்காரன்’. இப்படிக்  கண்டு பிடித்துக் கொண்டே/ சொல்லிக்கொண்டே போகலாம்.

மேலும், தங்கள் முதல் கதைகளைப் பற்றி அந்த   அந்த எழுத்தாளரே சில தகவல்கள் சொன்னால், இன்னும் சுவை கூடும் தானே?


சரி, ரா.கி.ரங்கராஜனிடம் வருவோம். அவருடைய முதல் சிறுகதை எது?

அவர் சொல்வதைக் கேளுங்கள்:


படிப்பு முடிந்ததும் வேலை தேடுவதற்காக என் அண்ணாவோடு சென்னைக்கு வந்த நாள், முதன் முதலாகப் போய்ப் பார்த்தது வாசன் அவர்களைத்தான். அப்போது அவர் வீடு எட்வர்ட்  எலியட்ஸ் சாலையில் ( இப்போதைய ராதாகிருஷ்ணன் சாலை) இருந்தது. பெயர் கூட ‘சுதர்ஸன் இல்லம்’ என்று ஞாபகம்.

வாசலில் ஒரு ஈஸிசேரில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் வாசன். நாங்கள் போய் அவர் முன் நின்று வேலை தேடி வந்திருப்பதாகச் சொன்னோம். எனக்கு அப்போது பத்தொன்பது வயதிருக்கும். என்னை ஏற இறங்கப் பார்த்த அவர், “ரொம்பச் சின்னப் பையனா இருக்கியேப்பா, கதையெல்லாம் எழுதிவியா? “ என்று கேட்டார்.

“ எழுதுவேன், சார்” என்றேன்.
வாசன்


“ஏதாவது இருந்தா எழுதிக் கொண்டு வா, பார்க்கலாம்” என்றார் வாசன்.

அப்போது ஆனந்த விகடனில் தேவன் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.கும்பகோணம் அரசினர் கல்லூரியில் என் தந்தையிடம் சமஸ்கிருதம் படித்தவர் தேவன். அதனால் தேவனுக்கு என்னிடம் ஒரு தனியான பிரியம் உண்டு. மயிலாப்பூரில் அவர் வீட்டுப் பக்கத்தில் நான் இருந்ததால், வாசன் சொன்னபடி ஒரு சிறுகதை எழுதி எடுத்துக் கொண்டுபோய் தேவனிடம் தந்தேன்.

தேவன்


“நன்றாக இருக்கிறது. பிரசுரிக்கிறேன்” என்று சொன்னவர், அதை எங்கேயோ கெட்டுப் போக்கிவிட்டார் பல மாதங்கள் வரை. நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். ஆனால், திடீரென்று ஒரு நாள் அது விகடனில் பிரசுரமாயிற்று! ராஜு படம் வரைந்திருந்தார். 1946-ம் வருடம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் அது. நான் வானத்துக்கும் பூமிக்குமாகப் பறந்தேன் பெருமையுடன்.என் முதல் சிறுகதை, முதன்முறையாக விகடனில் வெளியாகி, நானும் ஒரு எழுத்தாளன் என்று பிறவியெடுத்தது அன்றைய தினம்தான். “


[ நன்றி : விகடன் ]

அது சரி, அந்தச் சிறுகதையின் பெயர் என்ன? கதை கிடைக்குமா?

பி.கு.

46 ஜூலை/ஆகஸ்ட் விகடன் இதழ்களில் ரா.கி.ர. கதை ஏதும் இல்லை என்று தெரிவித்த நண்பர் ரவிபிரகாஷ் ரா.கி.ர. விகடனில் எழுதிய முதல் கதை 26-01-1947 -இல் ஸிம்ஹாவின் ஓவியத்துடன் வந்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார். கதையின் பெயர்  "உடன்பிறப்பு" .  அவருக்கு நம் நன்றி.( இக்கதை அவர் தொகுப்புகளில் இல்லை என்று தோன்றுகிறது.) 

பசுபதி
3-9-2021
  

தொடர்புள்ள பதிவுகள்:
ரா.கி.ரங்கராஜன்

10 கருத்துகள்:

Ranjani Narayanan சொன்னது…

வணக்கம் திரு பசுபதி ஸார்! அந்தக் கதை கிடைத்ததா? அடுத்த பதிவில் எதிர்பார்க்கிறேன்.

# * # சங்கப்பலகை அறிவன் # * # சொன்னது…

சுவாரசியமான செய்தி.
கடைசிப் படத்தில் இருப்பது வாசனா, அல்லது ராகிர'வா?

Pas S. Pasupathy சொன்னது…

>>அந்தக் கதை கிடைத்ததா ?>>

என்னிடம் இல்லையே, ரஞ்சனி! ரா.கி.ரவின் தீவிர விசிறிகள் பலர் வலையில் இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் யாராவது பதில் போடுவார்களோ என்ற எதிர்பார்ப்பில் எழுதினேன்! வேண்டுமானால், நீங்களும் அந்த வலைப்பூக்களில் கேட்டுப் பார்த்து, பலன் இருந்தால் இங்கே சொல்லுங்களேன்! அவருடைய சிறுகதைக் தொகுதிகள் யாவை? அவற்றில் இது இருக்கிறதா? ..தகவல்கள் வேண்டும். உதவுவோருக்கு நன்றி.

Pas S. Pasupathy சொன்னது…

>>கடைசிப் படத்தில் இருப்பது வாசனா, அல்லது ராகிர'வா? >>

இல்லை, அது “தேவன்”. ( இப்போது படங்களுக்குத் தலைப்புகள் கொடுத்துவிட்டேன்.) நன்றி!

sathish (bengaluru) சொன்னது…

I have good collection of short stories by ra ki rangarajan. if I know the name I would search for the story and share it.

Pas S. Pasupathy சொன்னது…

@satishkumar RKR has written a book called "avan" , supposedly his biography. I don't have it. If you have it, check it; it may contain the name of his first story. ( I also have a lot of his stories...but unfortunately Tamil publishers don't give the Year, month, magazine in which each originally appeared. If done, we could have found it by now! ) Well, as I said, some more research is needed...If you know other fans of RKR, you can try to find the name... and let us know ?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சுவாரஸ்யமான தகவல்கள்..!

NANA"S REMNISCENCES சொன்னது…

தேவன் படத்தின் கீழேயே பெயர் இருக்கிறது.

G Swaminathan சொன்னது…

Interesting! But Vasan's house name was 'Gemini House'. But, he had another house by name 'Sudarsan' in the same road in the opposite direction which I think was smaller!

Pas S. Pasupathy சொன்னது…

Thanks, chamu1949. As I know, Gemini House was originally India House built in 30's by C.Rajam, industrialist. C.Rajam lived there until 1944. Later he sold it to Raja of Sivaganga, who later sold it to Vasan. The qn is: when did Vasan acquire it ? Perhaps only after the incident reported by RKR , after 45-46 !

கருத்துரையிடுக