புதன், 12 செப்டம்பர், 2012

பாரதி மணிமண்டபம் - 3

செல்லம்மாள் பாரதியின் கடிதம்

முந்தைய பகுதிகள்:

பாரதி மணிமண்டபம் - 1   ,    பாரதி மணிமண்டபம் - 2
(தொடர்ச்சி)

“ பாரதி பிறந்தார்” கட்டுரைக்குப் பின் பாரதி ஞாபகச் சின்னம் பற்றிக் 'கல்கி' ஆசிரியர் பல கட்டுரைகளைக் 'கல்கி'யில் எழுதி இருக்க வேண்டும். அவற்றுள் எனக்குக் கிடைத்த ஒன்றை இத்துடன் இணைத்திருக்கிறேன். ( மே 13, 45- இதழில் வந்தது )

எட்டயபுரம் ராஜா நிலம் கொடுத்தது பற்றி எழுதி இருக்கிறார். ராஜாஜியின் தலைமையில்  3-6-45-இல் அஸ்திவார விழா நடத்துவதென்ற தீர்மானத்தையும் சொல்கிறார்.

அதே கட்டுரையில் ஸ்ரீமதி செல்லம்மாள் பாரதி 30-4-45 -இல் எழுதிய  ஒரு கடிதத்தையும் பிரசுரிக்கிறார் 'கல்கி'. ( 29-4-45 தேதி 'கல்கி' யில் வெளியான 'விஷயம்' ஒன்றைக் குறிப்பிடுகிறார் செல்லம்மாள் பாரதி; போன பதிவில் எழுதியபடி, சேர்ந்த பணத்திலிருந்து அவருக்கு  ஓர் உபகார நிதி அளிப்பது பற்றிய  கீழ்க்கண்ட அறிக்கை அது . 'கல்கி'க்கும் ஓர் அன்பளிப்பு வைத்திருக்கிறேன் என்கிறார் செல்லம்மாள். அது என்ன என்று அறியக்  கடிதத்தைப் படியுங்கள்!பாரதி மணிமண்டபத்தின் அடிக்கல் நாட்டு விழா எப்படி நடந்தது? பார்க்கலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக