திங்கள், 24 ஜூலை, 2017

781. அலெக்சாண்டர் டூமா - 1

நடிக ஆசிரியர் டூமாஸ் 
வி.ஆர்.எம். செட்டியார்ஜூலை 24. அலெக்சாண்டர் டூமாவின் பிறந்த தினம்.

அன்றும், இன்றும், என்றும் - நான் ‘டூமா’வின் ரசிகன் !  அவருடைய ‘ Three Musketeers' புதினத்தை படித்தால் ‘கல்கி’யின்  வந்தியத் தேவனிலும், நந்தினியிலும், பழுவேட்டரையரிலும்  ‘டூமா’வின் பாத்திரங்களின் தாக்கம் நன்றாய்த் தெரியும். ( ”அந்தக்” காலத்தில், ‘ Three Musketeers' திரைப்படம் ‘ மூன்று எம்.ஜி.ஆர். வீரர்கள்’ என்ற தமிழ்ப் பெயருடன் திரையரங்கத்தில் வந்தது ! :-)

இப்போது “பொன்னியின் செல்வ”னின் தொடர்ச்சியாய்ப் பல புதினங்கள் வந்துள்ளனவா? டூமாவே தன் “ Three Musketeers" - ஐத் தொடர்ந்து
Twenty Years After,  The Vicomte de Bragelonne, Louise de la Valliere, and The Man in the Iron Mask  என்ற அற்புதமான வரலாற்று நவீனங்களைப் படைத்தார். இவை யாவுமே தற்கால நடையில் தமிழாக்கம் செய்யப் படவேண்டிய புதினங்கள்.  ( “ Three Musketeers" மட்டும் “ மூன்று வீரர்கள்” என்ற பெயரில் 1962-இலும், “நான்கு நண்பர்கள்” என்ற பெயரில் 1957-இலும் மொழிபெயர்க்கப்  பட்டுள்ளது.  )

‘ சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை இதோ!

தொடர்புள்ள பதிவுகள்:
அலெக்சாண்டர் டூமா : தமிழ் விக்கிப்பீடியா

அலெக்சாண்டர் டூமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக