சனி, 30 மார்ச், 2019

1258. பாடலும் படமும் - 57

ராகு
கி.வா.ஜகந்நாதன்

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]

ராகுவின் ஒவியத்தில் அவனுடைய உருவம் அச்சத்தைத் தருவதாக இருக்கிறது. திருமுகம் மாத்திரம் தேவனைப் போல இருப்பினும் உடல் முழுவதும் செதில்கள் அமைந்து பாம்பு, என்பதைப் புலப்படுத்துகின்றன. சூலமும் கட்கமும் ஏந்திய கைகளும் வரதமுடைய கை ஒன்றும், சும்மா தொங்கப்போட்ட கை ஒன்றும் உடைய கோலத்தில் கரிய உடையோடு தோலையும் அணிந்து வீற்றிருக்கிறான். மேலே உள்ள சிங்கக் கொடி, அவனுடைய வாகனமும் அது என்பதை உய்த்துணர வைக்கிறது. கொடியும் குடையும் கருநிறம் உடையன. முறத்தைப் போன்ற ஆசனத்தில் ராகு வீற்றிருக்கிறான். -

வலப்பக்கத்தில் அதிதேவதையாகிய பசுவையும் இடப்புறம்
பிரத்தியதி தேவதையாகிய சர்ப்பத்தையும் காண்கிறோம். மேருவை
இடமாகச் சுற்றுபவன் ராகு பின்னால் உள்ள மலை இதைக் குறிப்பிக்
கின்றது. பின்னே நிலைக்களம் பயங்கரமாக அமைந்திருக்கிறது.

கரவின் அமுதுண்டான் ; கார்நிறத்தான் ; மேனி
அரவம் முகம்அமரன் ஆனான் ; - மருவுமுறம்  
ஆகும் இருக்கையான்; அஞ்சுதகு தோற்றத்தான் ;
ராகுநிழற் கோளென் றிசை.

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

சூரியன்

சந்திரன்

செவ்வாய்

புதன்

பிருகஸ்பதி

சுக்கிரன்

சனி

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

[ மேலும் நவக்கிரகங்களைப் பற்றி அறிய விரும்பினால், 
  என்ற நூலைப் படிக்கவும்.]

வெள்ளி, 29 மார்ச், 2019

1257. கொத்தமங்கலம் சுப்பு - 26

தொழில் 
கொத்தமங்கலம் சுப்பு

‘சக்தி’ இதழில் 1946 -இல் வந்த ஒரு கவிதை

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

கொத்தமங்கலம் சுப்பு

சனி, 23 மார்ச், 2019

1255. பாரதி - 1

பாரதியின் மந்திரக் கவிகள்
ரா.நாராயணன்

‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த கட்டுரை.

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

வியாழன், 21 மார்ச், 2019

1254. சோ ராமசாமி -4

எது வாழ்க்கை ?
சோ

’சோ’ விகடனில் 1970-இல் எழுதிய நான்காம் நவரச(!)க் கதை (தத்துவக் கதை).
===

அவன் நடந்துகொண்டிருந்தான்; முடி வில்லாமல் நீண்டுகொண்டேயிருந்த நடை எங்கேதான் முடியுமோ! கையிலிருக்கும் கமண்டலத்தையும், உடம்பிலிருக்கும் காவி உடையையும், நெற்றியிலிருக்கும் திருநீற்றையும், முகத்திலிருக்கும் தாடியையும் கண்டால் ஒரு சாமியாரோ என்ற சந்தேகம் வருகிறது.

இந்த இளம் வயதில் அவன் சாமியாராகக் காரணமென்னவாக இருக்கும்? இப்போது ஏன் போகுமிடம் தெரியாமல் இப்படிப் போய்க்கொண்டிருக்கிறான்?

வாழ்வாராம் வாழ்வார் வாழாதார்
வாழுண்டு வாழைக்காயாம் வாழ்வே!

என்று திருவள்ளுவர் கூறியதற்கு இலக்கணமாக இருக்கிறதே அவன் வாழ்வு!

பெரிய பண்ணை சுப்புராயன் என்று பேர் சொன்னால் அந்த ஊரே அடங்கும். மாநிறம்; தலையில் கூந்தல். அந்த கூந்தல் கறுப்பு; மீசையும் கறுப்புதான். ஆனால் பற்களோ வெளுப்பு! அந்த கம்பீரத்தோடு பெரிய பண்ணை சுப்புராயன் தெருவில் வந்தால், அழுத குழந்தைகூட வாயை மூடும். ஏனென்றால், ஏதாவது குழந்தை அழுதால் சுப்புராயன் அந்த குழந்தை வாயில் கடலை உருண்டையைத் திணித்துவிடுவார். அவ்வளவு தாராள மனது. அந்த சுப்புராயனின் மகன்தான் ராயப்பன். அவன் பிற்காலத்தில் சாமியாராகப் போகிறான் என்று யார்தான் நினைத்திருப்பார்கள்?
வாழ்க்கை என்பது ஒரு கடிகாரம். அதில் மனிதன் ஒரு பெரிய முள்; சின்ன முள்தான் கடவுள். பெரிய முள்ளை சின்ன முள் துரத்துகிறது. சிறிய முள்ளை பெரிய முள் துரத்துகிறது. இரண்டும் சேரும்போது கடிகாரம் ஓடுகிறது. கடிகாரம் நின்றுவிட்டால் பெரிய முள்ளும், சிறிய முள் ளும் நின்றுவிடுகின்றன. அப்படியிருக்க அலாரம் அடிக்கும் சமயத்தை யாரால் சொல்ல முடியும்? ராயப்பனுக்கு மட்டும் இப்படிப்பட்ட மனப் பக்குவம் சிறு வயதில் எப்படி ஏற்பட முடியும்? சிறிய முள்ளை துரத்தும் பெரிய முள்ளாகவே வாழ்ந்தான். வாழ்க்கை என்னும் கடிகாரம் ஓடிக்கொண்டே இருந்தது. விநாடி முள்ளைத்தான் காணோம்! எங்கே தேடுவது? யாரைக் கேட்பது? என்ன வாழ்க்கை இது?

இந்தச் சமயத்தில்தான் அவனுக்கு அவளுடைய நட்பு ஏற்பட்டது. இதயத்தையே திறந்து அவள் முன் வைத்தான். தன் உயிரையே கொடுப்பதாகக் கூறினான். ஆனால், அவளோ சம்மதிக்கவில்லை. அவளையும் குற்றம் கூறிப் பயன் இல்லை என்பதை அவன் அந்தராத்மா அறியும். வேறு வழியின்றிக் காவியுடை அணிந்தான்.

சித்தனே, பித்தனே, பிறைசூடி கந்தனே
இத்தனை, அத்தனை என்றிராமல் எத்தனை!
பக்தனே, முக்தனே சர்வபுத்த சொந்தனே
வத்தலை, பத்தலை அடியார் குளித்தலை!

என்ற சித்தர் பாடலொன்று ராயப்ப சாமியாருக்கு நினைவு வந்தது.
அப்போது 'சுவாமி' என்ற குரல் கேட்க, தியானத்திலிருந்து விடுபட்டு, அழைத்தது யார் என்று பார்த்தார் சாமியார். என்ன? அவளா இது! எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறான்!

"நீயா?" என்றான் ராயப்பன். "பெண்ணே! இனி நீ கேட்டாலும் என் உயிரைத் தருவதற்கில்லை. உயிர் என்பது புரியாத புதிர்! பசுவிற்கு புல்லைக் கொடுத்தால், பதிலுக்கு அது நமக்கு பாலைத் தருகிறது. ஆனால் மனிதன்? ஐயோ! ஒரு பிடி சோறு போட்டால் பதிலுக்கு ஒரு ஏப்பம் விடுகி றான்! ஏப்பம் பசும்பாலாகுமா? அதுதான் வாழ்க்கை."

"அப்படியானால் நாம் சேர்ந்து வாழவே முடியாதா?" என்று கேட்டாள் அவள்.

அவன் நடந்தான்... அடிவானத்தை நோக்கி! அவளை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு போனார்கள்.

  [ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சோ ராமசாமி

புதன், 20 மார்ச், 2019

1253. பாடலும் படமும் - 56

புதன்
கி.வா.ஜகந்நாதன்

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]

வண்ண ஒவியத்தில் விளங்கும் புதன் பொன்னிறமேனியோடு மஞ்சளாடை புனைந்து, சிங்க வாகனம் ஏறி, வாளும் பரிசையும் கதையும் வரதமும் திருக்கரங்களில் ஏந்தி, அழகு பொலிய வீற்றிருக்கிறான். அவனுடைய கொடியில் சிங்கம் இருக்கிறது. மேருவை வலஞ் செய்யும் குறிப்பைப் பின்னே தோன்றும் அதன் உருவம் தெரிவிக்கிறது.

வலப்புறத்தில் மேலே அதிதேவதையாகிய விஷ்ணு, சங்க சக்ர கதா தாரியாகத் திருமகளுடன் நிற்கிறார். இடப் பக்கத்தில் பிருகு முனிவருடைய அடிச்சுவடு மார்பில் தோன்ற இரண்டு திருக்கரங்களுடன் நாராயணனாகிய பிரத்தியதிதேவதை வீற்றிருக்கிறார்.

கீழே கன்னி யொருத்தியின் உருவமும் ஆணும் பெண்ணுமாகிய இரட்டையுருவமும் கன்னியா ராசிக்கும் மிதுன ராசிக்கும் தலைவன் புதன் என்பதை நினேப்பூட்டுகின்றன. பச்சைப் பசேலென்ற நிலைக்களத்தில் புதன், அறிவின் உருவாகவும் அழகின் உருவாகவும் திகழ்கிறான். சந்திரன் உள்ளங்கவர் அழனாக இருப்பதுபோலவே இவனும் அழகனாகக் காட்சி தருகிறான். சந்திரனுடைய மகன்தானே இவன்? 

புந்திவலி சேரப் புரிவான்பொன் மேனியினான்
சந்திரன்சேய் வாள்பரிசை தாங்குகதை - உந்துகையான் 
வெம்புசிங்க ஊர்தியான் மேனாள் இளைதழுவும் 
அம்புதன்என் றோதும் அவன்.

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

சூரியன்

சந்திரன்

செவ்வாய்

பிருகஸ்பதி

சுக்கிரன்

சனி

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

[ மேலும் நவக்கிரகங்களைப் பற்றி அறிய விரும்பினால், 
  என்ற நூலைப் படிக்கவும்.]

1252. எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் -5

’பஞ்ச பாண்டியர்’ 
எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர்

‘சக்தி’ இதழில் 1943-இல் வந்த ஒரு கதை.

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:
எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர்

ஞாயிறு, 17 மார்ச், 2019

1251. க.நா.சுப்ரமண்யம் - 3

தமிழகம் -2
க.நா.சுப்ரமண்யம்

தமிழகம் -1

‘சுதேசமித்திர’னில் 1936-இல் வந்த இரண்டாம் பகுதி இதோ.

[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

க.நா.சுப்ரமண்யம்

சனி, 16 மார்ச், 2019

1250. பாடலும் படமும் -55

சனி பகவான்
கி.வா.ஜகந்நாதன்

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]

படத்தில், கழுகு வாகனத்தின்மேல் அமர்ந்திருக்கும் சனிபகவான் திருவுருவத்தைக் காணலாம். இவன் உருவமும் உடையும் அணியும் மணியும் மலரும், கருமையும் நீலமும் உடையனவாக ஒவியர் எழுதியிருக்கிறார் சடையுடையவனாகவும் சூலமும் வில்லும் அம்பும் பூண்டவனாகவும் காட்சி தருகிறான் சனி, வலக்கால், சற்றே மெலிந்து தோன்றுகிறது. இடப்பக்கத்தில், மேலே கும்பமும் முதலையும் உள்ளன. அவை கும்ப ராசிக்கும் மகர ராசிக்கும் இவன் தலைவன் என்பதைக் குறிப்பிக்கின்றன. பின்னே உள்ள மேருமலை, சனி அதனை வலம் வருபவன் என்பதற்குச் சான்றாக நிற்கிறது.

பார்ப்பதற்கு அச்சத்தை விளைவிக்கும் உருவங்கொண்ட இவனுடைய வலப்பக்கத்தில் கீழே, எருமைக் கடாவின்மேல் யமன் அமர்ந்திருக்கிறான். இவன் சனிக்கிரகத்தின் அதிதேவதை. இடப்பக்கத்தில் பிரத்தியதி தேவதையாகிய பிரஜாபதி ஆசனத்தில் வீற்றிருக்கும் கோலத்தில் தோன்றுகிறான்.

சனியை ஆயுஷ்காரகனாகச் சொல்வது சோதிட நூல். இவனை வழி பட்டு இவனுடைய அருளுக்கு உரியவர்களானால் நீண்ட ஆயுளுடன் வாழலாம். இவனைப்போல் கெடுப்பவரும் இல்லை; இவனைப்போல் கொடுப்பவரும் இல்லை.

வெய்யசுட ரோன்சாயை மேவுமகன், சூற்கரத்தான் 
பைய நடக்கின்ற பங்கு, கரு-மெய்யன் 
இனியன் அருளுங்கால், இன்றேல் கொடியன், 
சனியன்.அவன் சீற்றம் தவிர்

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

[ மேலும் நவக்கிரகங்களைப் பற்றி அறிய விரும்பினால், 
  என்ற நூலைப் படிக்கவும்.]

பி.கு. தமிழ்நாட்டில் காகமே வாகனமாகச் சொல்லப்படுவதைக் குறிப்பிடும் கி.வா.ஜ. வடமொழி தியான ஸ்லோகங்கள் பலவற்றில் கழுகைக் குறிப்பிடுவதைச் சொல்கிறார். எஸ்.ராஜம் அதன்படி வரைந்திருக்கிறார். மேலும் அறிய மேலே  இணைப்பில் உள்ள கி.வா.ஜ. வின் 'நவக்கிரகங்கள்' என்ற நூலைப் படிக்கலாம்.

வெள்ளி, 15 மார்ச், 2019

1249. ராகவ எஸ். மணி -1

ஹோஜ்ஜாவின் “புத்திசாலிக் கதை” -1

அண்மையில் ( 22 ஜனவரி, 2019 ) மறைந்த இனிய நண்பர் ராகவ எஸ். மணியின்  நினைவில் நாடோடிக் கதைகளிலிருந்து அவர் தொகுத்து,  ஓவியங்களும் வரைந்து  பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட சிறுவர் நூலிலிருந்து ஒரு கதையை இங்கே வெளியிடுகிறேன்.

 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

வியாழன், 14 மார்ச், 2019

1248. ஏ.கே.செட்டியார் - 5

பம்பாயில் கண்டவை
ஏ.கே.செட்டியார் 

‘சக்தி’ இதழில் 1941-இல் வந்த ஒரு கட்டுரை.

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:
ஏ.கே.செட்டியார்

புதன், 13 மார்ச், 2019

1247. சங்கீத சங்கதிகள் - 181

அருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 5
அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது

1944-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரு பாடல்கள் இதோ!

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்

செவ்வாய், 12 மார்ச், 2019

1246. அகிலன் - 3

கடவுளின் பிரதிநிதி
அகிலன் 

‘சக்தி’ இதழில் 1944-இல் வந்த ஒரு படைப்பு.

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
அகிலன்

திங்கள், 11 மார்ச், 2019

1244, சங்கீத சங்கதிகள் - 180

கண்டதும் கேட்டதும் - 7
“ நீலம்”

இந்த 1943 சுதேசமித்திரன் ரேடியோ விமர்சனக்  கட்டுரையில் :
ஜி.என்.பி., வசந்தகோகிலம் 

(  இந்த வருடம்  நூற்றாண்டு ‘கொண்டாடும்’  இனிய பாடகி  என்.சி. வசந்தகோகிலம் பற்றிய இசை விமர்சனம் அரியது: இதுவரை நான் பார்த்த ஒரே  கச்சேரி விமர்சனம் இது ! :-(  )  

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

ஞாயிறு, 10 மார்ச், 2019

1245. க.நா.சுப்ரமண்யம் - 2

தமிழகம் -1
க.நா.சுப்ரமண்யம்

‘சுதேசமித்திர’னில் 1936-இல் வந்த ஒரு கட்டுரை.

[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

க.நா.சுப்ரமண்யம்

வெள்ளி, 8 மார்ச், 2019

1243. பாடலும் படமும் - 54

பாஞ்சாலி சபதம் 

‘சுதேசமித்திர’னில் 1938-இல்  வந்த ஒரு படத்தொடரிலிருந்து  இரு பக்கங்கள்.

ஒவ்வொரு வாரமும் பாரதியின் காவியத்திலிருந்து ஒரு பகுதிக்கு ஒரு படம் .
ஓவியர் கே.ஆர்.சர்மா . விகடனிலும் நிறைய வரைந்திருக்கிறார்.
முழுத் தொடரும் கிட்டினால் எவ்வளவு அழகாய் இருக்கும் ?

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]
தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

வியாழன், 7 மார்ச், 2019

1242. நா.பார்த்தசாரதி - 7

மறுபடியும் குறிஞ்சி மலர்கிறது 
நா.பார்த்தசாரதி 

‘குறிஞ்சி மலர்’ என்ற அமெரிக்க இதழில் நா.பா. 1985-இல் எழுதிய ஓர் அரிய கட்டுரையை இங்கே இடுகிறேன்.  நா.பா வின் தீவிர விசிறிகள் கூட  இதைப் படித்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் ! ( இக்கட்டுரையின் விரிவு ஏற்கனவே கல்கியில்  1969-இல் வந்தது. அதில் வந்த கட்டுரையும் இரு படங்கள் கீழே )

அமரிக்காவில் ‘குறிஞ்சி மலர்’ என்ற மாத இதழ் 1985 ஏப்ரலில் தொடங்கிச் சில காலம் வெற்றிகரமாய் நடந்தது. அதன் முதல் இதழில் நா.பா. வும் , பேராசிரியர் ஹார்ஜ் ஹார்ட்டும்   கடிதங்கள் எழுதி இதழுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.  நா.பா. வின் குறிஞ்சி மலர் நாவலை  அவர் அனுமதியுடன் மாதா மாதம் மீண்டும் வெளியிடத் தொடங்கியது அந்த இதழ். அந்த  முதல் இதழுக்காக  ஒரு விசேஷக் கட்டுரையையும்  கொடுத்திருந்தார் நா.பா.   இதோ அந்தக் கடிதங்களும், கட்டுரையும் !  

கல்கியில் 1969-இல் வந்த கட்டுரை.