பார்த்திபன் கனவு - 1
'கல்கி' யின் முதல் வரலாற்றுப் புதினமான 'பார்த்திபன் கனவு'
16, அக்டோபர், 1941 கல்கி இதழில் தொடங்கியது.
முதல் பாகத்தில், முதல் அத்தியாயத்தில் வந்த மூன்று ஓவியங்கள் .... முதலில்! வரைந்தவர்
"வர்மா" . 'கல்கி'யில் சேர்வதற்கு முன் 'ஆனந்த விகட'னில் பணி புரிந்தவர் வர்மா.
இந்தப் படத்தில் , பார்த்திப சோழ மகாராஜா, அருள்மொழி மகாராணி, இளவரசன் விக்கிரமன், வள்ளி, பொன்னன் ஆகிய ஐவரையும் சந்திக்கிறோம்.
அடுத்த சில இதழ்களில் வந்த சில ஓவியங்கள். எஸ்.ராஜம் அவர்களும் சில ஓவியங்கள் வரைந்தார்.
பல்லவ தூதர்கள் வருகிறார்கள்! பொன்னனும், வள்ளியும் போர் தொடங்கும் சேதியைக் கேட்கிறார்கள்.
வள்ளியும், அவள் பாட்டனார் வீரபத்திர ஆச்சாரியும் போர் முழக்கம் கேட்கிறார்கள்.
'சித்திர மண்டபத்தில்' பார்த்திப மகாராஜா வரைந்த சித்திரம். [ ஓவியம்: எஸ்.ராஜம் ]
|
[ எஸ்.ராஜம் ]
சித்திரத்தில் :
" பார்த்திப மகாராஜாவின் தந்தை, மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் முன்னால் வாளையும் வில்லையும் வைத்து அடிபணிந்து, விதவிதமான இரத்தினங்களையும் ஆபரணங்களையும் காணிக்கையாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக்கொள்ளும் காட்சி அங்கே சித்தரிக்கப்பட்டிருந்தது. அதை நினைக்கும் போதே பொன்னனுக்கும் இரத்தம் கொதித்தது.
"சோழ நாடு இந்த அவமானத்தை எத்தனை நாளைக்குச் சகித்துக் கொண்டிருப்பது? யுத்த களத்தில் பல்லவர்களின் இரத்தத்தைப் பெருக்கி அந்த அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டாமா?" என்று எத்தனையோ முறை பொன்னன் சிந்தித்ததுண்டு"
|
குந்தவை, நரசிம்ம பல்லவர். சோழராஜ குமாரன் விக்கிரமன் புரட்டாசிப் பௌர்ணமியன்று சோழ நாட்டின் சுதந்திரக் கொடியை உயர்த்த உத்தேசித்திருக்கிறான் என்று கூறும் ஓலையைக் கொண்டுவந்த உறையூர்த் தூதன்.
சங்கலிகளால் கட்டப்பட்ட விக்கிரமனைப் பார்க்கிறாள் குந்தவை.
|
[ எஸ். ராஜம் ] |
நரசிம்ம பல்லவர் வரைந்த ஓவியம்.
கப்பலில் செல்லும் விக்கிரமனை ஆசீர்வதிக்கும் சிவனடியார்.
அருள்மொழித் தேவி, பொன்னன், சிவனடியார்.
செண்பகத் தீவை நெருங்குகிறான் விக்கிரமன்.
செண்பகத் தீவின் மன்னனாய் ஏற்கப்படுகிறான் விக்கிரமன்.
தொடர்புள்ள பதிவுகள்:
ஓவிய உலா
S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam