தேர்தல்
பசுபதி
[ஆறு வருடங்களுக்கு முன் - 17-11-2015 அன்று - தினமணி/கவிதைமணி -யில் வெளியான கவிதை. ( கொடுக்கப்பட்ட தலைப்பு: தேர்தல் ) ]
தேர்தல் முடிந்து போச்சு தம்பி!
. . திரையும் தூக்கி யாச்சு!
தில்லு முல்லு திரைப்ப டத்தைத்
. . திடுக்கி டாமல் பாரு!
வாக்குத் தேடி வீடு வந்த
. . மனிதர் மறைந்து போவார்!
சாக்குப் போக்கு சொல்லி வாக்கைத்
. . தட்டிக் கழிப்பார் பாரு!
எனக்குக் கல்வி ஒன்றே தெய்வம்
. . என்ற வெற்றி வீரர்
தினமும் மறைவாய் லக்ஷ்மி பூஜை
. . செய்யும் காட்சி பாரு!
இனிமேல் ராம ராஜ்யம் தருவேன்
. . என்று சொன்ன ஹீரோ
சினிமா முடிவில் வில்ல னாதல்
. . சினப்ப டாமல் பாரு!
விளக்கு மாறு பழசாய்ப் போனால்
. . வேலை செய்யு மாப்பா?
களைத்த மக்கள் புதுசு வாங்கக்
. . காத்தி ருத்தல் பாரு!
If you are already a Follower of my blog , thanks for reading!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக