வியாழன், 3 நவம்பர், 2016

டொரண்டோவில் தமிழ் - 1

செந்தாமரை 


டொரண்டோ தமிழ் சங்கத்தின் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வு 29.10.2016 அன்று   நடைபெற்றது. 

 நிகழ்வில் "பத்திரிகைத்துறையில் எமது பார்வைகளும் பயணங்களும்" என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. விளம்பரம், ஈழநாடு, தமிழர் செந்தாமரை, உதயன் என்ற நான்கு பத்திரிகையின் ஆசிரியர்கள் முதலில் பேசினார்கள்.ஐயம் தெளிதல் அரங்கில் என்னிடம் இருந்த “செந்தாமரை” என்ற ஒரு ”பழம்”  பத்திரிகையை அரங்கில் அறிமுகம் செய்தேன்.  இதுவே டொரண்டோவில்  நான் பார்த்த முதல் தமிழ்ப் பத்திரிகை. ஜனவரி 1982-இல் தொடங்கிய “செந்தாமரை” பத்திரிகையில் அலமேலு மணி ( திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் புதல்வி), நான் இருவரும் முதல் சில இதழ்களில் சில கட்டுரைகள், கவிதைகள் எழுதியிருந்தோம்.  ( கீழே அலமேலு மணி டொரண்டோவில் பாரதி கலா மன்றம் நடத்திய பாரதி தின நிகழ்ச்சியைப் பற்றி எழுதியுள்ளதைப் பார்க்கலாம்) 

இதுவே டொரண்டோவில் வெளியான முதல் தமிழ்ப் பத்திரிகை என்பது என் கணிப்பு.  அப்போதைய தொழில்நுட்ப நிலைப்படி, பல செய்திகள் மற்ற நாளேடுகள், பத்திரிகைகள் இவற்றிலிருந்து வெட்டி ஒட்டப் பட்டன: டொரண்டோவில் உள்ளோரின் படைப்புகள் கையெழுத்தில் எழுதப் பட்டு சேர்க்கப் பட்டன. ( இப்போது வெளிவரும் “ தமிழர் செந்தாமரை” க்கும் இந்தப் பத்திரிகைக்கும் தொடர்பில்லை.)  செந்தாமரையைப் பற்றி மற்ற விவரங்கள் முழுமையாய்க் கிட்டவில்லை. 87-வரை நடந்திருக்கும் என்று தோன்றுகிறது. நானும் பின்னர் அதில் எழுதவில்லை.

அந்நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களும், “செந்தாமரை” இதழின் சில பக்கங்களும் .[ படங்கள்:  நன்றி- அகில் ] 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக