சனி, 19 நவம்பர், 2016

சங்கீத சங்கதிகள் - 100

மாமாங்க மாறுதல்கள் ! -2

மாலி-சில்பி

முந்தைய பகுதி - ஐ நான் இடும்போது எனக்குக் கிட்டாத சில படங்க ளையும் , தகவல்களையும் இங்கு இடுகிறேன். 1933-இல் மாலி வரைந்த  வித்வான்களின் படங்களையும், 1945-இல்  வரையப்பட்ட சில்பியின் படங்களையும் ஒருங்கே காட்டியது இந்தத் தொடர்! 1945- விகடனில் வந்தது இந்தத் தொடர் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

ஒவ்வொரு படத்திற்கும் ஒரு சிறிய அறிமுகமும் வரும். என்னிடம் இருந்தவற்றுள் இப்போது அறிமுகமில்லாச் சில படங்கள்,  படமில்லாச் சில அறிமுகங்கள் என்று இருக்கின்றன! இரண்டும் உள்ள ஒரே ஒரு ஜோடி தான் உள்ளது! முதல் வகையில் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை + முடிகொண்டான் வெங்கடராமய்யர் படங்கள்.இரண்டாவது படம் : எனக்கு யாரென்று நிச்சயமாய்ச் சொல்ல முடியவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று உள்ள ஒரு அறிமுகம் + படம் ‘ஜோடி’  இதோ! 


 ஜி.என்.பி. + பாலக்காடு மணி ஐயர் இருவருக்கும் வந்த அறிமுகம்.


இத்துடன் வந்த ( முன்பு நான் இட்ட ) படத்தையும் மீண்டும் இடுகிறேன்.இப்போது சில ‘படங்களைத் தேடும் அறிமுகங்கள்’! இந்தப் படங்கள் யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள்!  சேர்த்துவிடுகிறேன்! 


[ நன்றி : விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்: 


சங்கதி -2 :”மாலி”யின் கைவண்ணம் 

அகாடமியில் மாலை ஆறு மணி 

சங்கீத முக பாவங்கள் : போட்டோ :மாலி

மாமாங்க மாறுதல்கள் ! -1 ; ..மாலி-சில்பி


சிரிகமபதநி

சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக