ஞாயிறு, 15 ஜனவரி, 2017

கொத்தமங்கலம் சுப்பு -18

வாய் மணக்க வாழவென்று பொங்கல் வைக்கிறோம் !
கொத்தமங்கலம் சுப்பு 40-களில் விகடனில் வந்த ஒரு கவிதை.
செல்லரித்த பக்கங்கள் தாம். ஆனால் உயிருள்ள கவிதை அல்லவா?

[ நன்றி: விகடன், ஓவியம்: கோபுலு ]

தொடர்புள்ள பதிவுகள்:

கொத்தமங்கலம் சுப்பு

2 கருத்துகள்:

Pas S. Pasupathy சொன்னது…

கவிஞர் க.ரவியின் பின்னூட்டம்:
====
Ravi Kalyanaraman நூற்றுக்கு நூறு உண்மை.
உப்பு போட்ட பொங்கல் மறு நாள் புளிக்குமே - எங்க
சுப்பு போட்ட பொங்கல் எந்
நாளும் மணக்குமே
கல்லும் மண்ணும் கலக்காத நல்ல பொங்கலாம்
சொல்லும் பொருளும் சேர்ந்து சொக்க
வைக்கும் பொங்கலாம்
(உப்பு போட்ட )
தப்புத் தாளம் தட்டாத தேசபக்தியும்
தமிழ்மணக்கும் வெள்ளித்தாம்
பூலப் பெட்டியும் - சேரி
குப்பத்திலும் உணர்ச்சி வரப் பாடும் சக்தியும் - நம்ம
சுப்பு வாக வந்த ஊரு
கொத்த மங்கலம் - அவர்
நாட்டுப்புறப் பாட்டுணர்ச்சி
யூட்டும் மந்திரம்
(உப்பு போட்ட )
16-01- 2019

Pas S. Pasupathy சொன்னது…

கவிஞர் க.ரவியின் பின்னூட்டம்:
=======
எளிமையும் வலிமையும் இணைந்த கவிதை
இனிமையும் எழுச்சியும் கலந்த கவிதை
தனிமையில் இல்லை சனங்கள் கூடித்
தாளம் இசைக்க ஒலிக்கும் கவிதை

தெளிவும் பொலிவும் மிகுந்த கவிதை
தேச பக்தியைத் தூண்டும் கவிதை
களியும் உருக்கமும் ஒரே தடத்தில்
கதிமாறாமல் நடக்கும் கவிதை

புலமை மிக்கோர் புகழும் கவிதை
புலமையற்றோர் நெகிழும் கவிதை
கலகலப் போடு களை கட்டுகின்ற
கச்சேரி எங்கள் சுப்புவின் கவிதை

குப்பனுக்கும் சுப்பனுக்கும் பாட்டுச் சொல்லிக்
குடிசைகளில் கலைவிளக்கம் ஏற்றி வைத்தார்
கப்பலுக்கா கடல் - இல்லை ஏழைக் கஞ்சிக்(கு)
உப்புதரத் தான்கடலென் (று)
உரக்கச் சொன்னார்
ஒப்பறிய காந்திமகான் கதையிசைக்கச்
சொல்லெடுத்தார் வில்லெடுத்தார் சொடுக்கி விட்டார்
சுப்புவைப்போல் ஒருகவிஞர் மீண்டும் வந்து
தோன்றவொரு நூற்றாண்டுத் தவமிருப்போம்

..... வானவில் கே.ரவி
15-01-2020

கருத்துரையிடுக