வெள்ளி, 1 ஜூன், 2018

1082. பாடலும் படமும் - 32

இராமாயணம் - 4
அயோத்தியா காண்டம், திருவடி சூட்டு படலம்


[ ஓவியம்: கோபுலு ]


அயா உயிர்த்து, அழு கண் நீர்
    அருவி மார்பிடை
உயா உற திரு உளம்
    உருகப் புல்லினான்,
நியாயம் அத்தனைக்கும் ஓர்
    நிலயம் ஆயினான்,
தயா முதல் அறத்தினைத்
    தழீஇயது என்னவே.

[ நியாயம் அத்தனைக்கும் ஒர் நிலயம் ஆயினான் - எல்லா
நேர்மைகளுக்கும் ஒப்பற்றஇருப்பிடமாக உள்ள இராமன்;  தயாமுதல்அருள் தெய்வம்; 
அறத்தினைத் தழீஇயது என்ன - தருமதேவதையைத் 
தழுவிக்கொண்டாற் போல; 
அயா உயிர்த்து - பெருமூச்சு விட்டு; 
அழு கண் நீர் - அழுகின்ற கண்களிலிருந்து வரும் நீர்; மார்பிடைமார்பிடத்தில்; 
அருவிஉயாவுற - அருவிபோலத் தழுவிப்பெருக; 
திரு உளம் உருக - உள்ளே அழகிய மனம்கரைந்துருக; புல்லினான் (பரதனைத்) தழுவினான் ]

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக