ஞாயிறு, 10 ஜூன், 2018

1089. பாடலும் படமும் - 33

இராமாயணம் - 5
ஆரணிய காண்டம், சூர்ப்பணகைப் படலம்[ ஓவியம்: கோபுலு ]சேண் உற நீண்டு, மீண்டு,
    செவ்வரி சிதறி, வெவ்வேறு
ஏண் உற மிளிர்ந்து, நானா விதம்
    புரண்டு, இருண்ட வாள் கண்
பூண் இயல் கொங்கை அன்னாள்
    அம்மொழி புகறலோடும்,
‘நாண் இலள்; ஐயன், நொய்யள்;
    நல்லளும் அல்லள் ‘என்றான்.

[ சேண் உற நீண்டு மீண்டு - பார்வை நெடுந்தூரம் செல்லுமாறு 
நீண்டு அப்புறம் செல்ல இடமின்றித் திரும்பி; 
செவ்வரி சிதறி - சிவந்த கோடுகள் பரவி; 
வெவ்வேறு ஏண் உற மிளிர்ந்து - பலவகைச்   சிறப்புப்  பொருந்தப் பிறழ்ந்து; 
நானாவிதம் புரண்டு இருண்ட வாள்கண் - பல் வேறு வகையாய் மாறித் திரும்பி இருள் போல் கருமைநிறம் கொண்ட வாள் போலும் கண்களோடு; 
பூண்இயல் கொங்கை அன்னாள் - அணிகலன் அணிந்த மார்பகங்களை உடைய அச்சூர்ப்பணகை; 
அம்மொழி புகறலோடும் - அச்சொற்களைக் கூறியவுடன்; 
நாண் இலள் ஐயள் நொய்யள் நல்லளும் அல்லள் என்றான் - இவள் வெட்கம் இல்லாதவள் பெரிதும் இழிந்தவள். நல்லவள் அல்லாதவள் என்று இராமன் நினைத்தான்.]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக