புதன், 31 ஆகஸ்ட், 2022

2225. கதம்பம் - 100

வாதாபி கணபதி

இரா. ஜகத்ரட்சகன்

[ திருவாரூர் பிள்ளையார், ஓவியம்:சில்பி]

'வாதாபி கணபதி'  யார்? 

திருச்செங்காட்டாங்குடி பிள்ளையாரா? 

திருவாரூர் பிள்ளையாரா? 

 கட்டுரையையும், தொடர்புள்ள எல்லாப் பதிவுகளையும் படித்துவிட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்! 

திருச்செங்காட்டாங்குடி பிள்ளையார். திருவாரூர் பிள்ளையார்]

[ நன்றி: திருக்கோயில் ]

தொடர்புள்ள பதிவுகள்:

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[நன்றி: https://www.hindutamil.in/news/blogs/48989-10-2.html ]

 பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

2224. இன்னும் கொஞ்சம்: கவிதை

இன்னும் கொஞ்சம்

பசுபதி

வியப்பூட்டும் அறிவுச் சக்தி ,

. . வியாபார வெற்றி யுக்தி

வியர்வையின்றி கிட்டா என்றே

. . மேல்நாடு கூறும் புத்தி !

'ஜயமுண்டு ' ஜபமே செய்து

. . பயமின்றி இன்னும் கொஞ்சம்

உயர்வானில் பறக்க வேண்டும்,

. . உழைப்பென்னும் சிறகை வீசி !

தொன்மையிலும் சொன்னம் உண்டு

. . தொலைநாட்டில் கழிவும் உண்டு !

அந்நியத்துத் தண்ணீர்ப் பாலை

. . அருந்திடுவோம் அன்னம் போல !

கந்தலான கருத்தை ஓட்டிக்

. . காற்றடிக்க இன்னும் கொஞ்சம்

சன்னல்கள் திறக்க வேண்டும் ,

. . சாரலிலே புதுமை வீச !

தாய்மொழியில் கல்வி ஊட்டத்

. . தடைஇருப்பின் உடைக்க வேண்டும் !

ஆய்வுகளின் தாக்கம் ஓங்க

. . ஆழமாக உழுதல் வேண்டும் !

சாய்வற்ற நீதி என்றே

. . சரித்திரம் படைக்க வேண்டும் !

பாய்ச்சலிலே இன்னும் கொஞ்சம்

. . பெளருஷத்தைக் காட்ட வேண்டும் !

[ 18 நவம்பர், 2001 'திண்ணை' யில் வெளியான கவிதை]

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

2223. கி.சந்திரசேகரன் - 2

கவி ரவீந்திரரும் பழமையும்

கி.சந்திரசேகரன்

ஆகஸ்ட் 28. கி.சந்திரசேகரனின் நினைவு தினம். (  இவர் சென்னைப் பல்கலைக்கழக தாகூர் இருக்கையின் பேராசிரியராகப் பணி புரிந்தவர்)

"ஸ்ரீ கி. சந்திரசேகரன் கற்பனைத் திறனும், கலைச் சுவையும், மனஸ்தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதும் ஆற்றலும் படைத்த எழுத்தாளர். தம் தந்தையாராகிய வி.கிருஷ்ணசாமி ஐயருடைய சரித்திரத்தை விரிவாக எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலும் அழகாக எழுதும் வன்மையுடையவர். "                                         -'கலைமகள்' இதழிலிலிருந்து .
( மேலும் சில விவரங்களுக்குத் தொடர்புள்ள பதிவுகளைப் பார்க்கவும்.)  

[ நன்றி: சக்தி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

2222. அகிலன் - 7

வெள்ளைத் திரையில் கறுப்பு மை

அகிலன்

[ நன்றி: கல்கி ]

சனி, 27 ஆகஸ்ட், 2022

2221. சங்கீத சங்கதிகள் - 326

திருவாவடுதுறை விசிட்: இசையில் சிறந்தவன் எல்லோரிலும் சிறந்தவன்!

ரமேஷ் வைத்யா

விகடன் 'பொக்கிஷ'த்தில் 30-8-1998 அன்று வந்த கட்டுரை.

===== 

27.8.1898- 'அகில உலக நாகஸ்வர ஏகசக்ராதிபதி’, திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பிறந்த தேதி. வரும் வாரம்  அந்த மாமேதைக்கு நூறாவது ஆண்டு!

அது ஒரு வாழ்க்கை. நாடெல்லாம் மழை பொய்த்து, தரைப்பாளம் பல்லிளித்தாலும் தான் மட்டும் கொஞ்சூண்டு தூறலாவது சம்பாதித்துக்கொண்டுவிடுகிற தஞ்சாவூர் ஜில்லா. போகம் போகமாக விளையும் தானியங்கள் கொடுத்த மிராசுத்தனமான வாழ்க்கை. அத்தர், வெற்றிலை, சீவல், பன்னீர் புகையிலை மணக்க, 'ததரினனா’ என்று முணு முணுக்கும் குரல்கள்.

திருமருகல் என்ற ஊரில் பிறந்து திருவாவடுதுறைக்கு இடம்பெயர்ந்து வளர்ந்த பையன், ராஜரத்தினம். ரத்தத்தில் ஹீமோகுளோபினோடு ஏழு ஸ்வரங்களும் கலந்து ஓட, எந்த நேரமும் வாயில் பாட்டு ததும்பிக்கொண்டேயிருக்கும். சின்னப் பையனாக இருந்தபோதே, கச்சேரிகளில் வாய்ப்பாட்டு பாட வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் திருவாவடுதுறை மடத்தின் ஆஸ்தான நாகஸ்வர வித்வானாக இருந்த நடேசப் பிள்ளையின் நிழல் கிடைத்தவுடன் தனது ஜீவன் இந்த நீண்ட, கறுத்த நாகஸ்வரம் என்கிற வாத்தியத்தில்தான் இருக்கிறது என்று கண்டுகொண்டான் பையன்.

அப்புறமென்ன, வாழ்க்கை முழுக்க ஆரோகணம்... அதாவது ஏறுமுகம்தான். போன இடமெல்லாம் சிறப்பு. அதனால் வந்த கித்தாய்ப்பு. ''ராஜரத்தினமா, பெரிய கலாட்டாப் பேர்வழியாச்சே...'' என்று ஆரம்பிப்பவர்கள்கூட, ''சரி... சரி... அவனையே கூப்பிடுங்கோ... கச்சேரி முழுக்க காதில் தேனை வாரின்னா ஊத்தறான்...'' என்று முடிக்கும்படியான வித்தை. ''ராஜரத்தினத்துக்கு என்ன... அர்ஜுன மகாராஜா. ஊருக்கு நூறு ரசிகாள். ஜில்லாவுக்கு ஒரு பொண்டாட்டி'' சக வித்வான்களின் சந்தோஷ விமரிசனம் இது. கலைஞனாவதற்கு முதல் தகுதி ரசிகனாக இருப்பது. ராஜரத்தினம் அபார ரசிகர். இவருக்கு ஐந்து மனைவிகள்! தனக்கான எல்லா வெற்றிகளையும் தன் வாத்தியமே தனக்குப் பெற்றுத் தரும் என்பதில் ஏக நம்பிக்கைகொண்டிருந்தவர் ராஜரத்தினம். இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் காணும் 'அகில உலக நாகஸ்வர ஏகசக்ராதிபதி’ என்கிற அடைமொழியை அவர் பெரு விருப்பத்தோடு உபயோகித்துக்கொள்வார்.

'இசையில் சிறந்தவன் எல்லோரிலும் சிறந்தவன்’ என்று அவர் நம்பியதற்கு ஊர்ப் பக்கம் போனால் நிறைய உதாரணக் கதைகள் சொல்கிறார்கள்.

ஒரு கச்சேரிக்கு, தான் வரும்போது எழுந்து நிற்காத ஜில்லா கலெக்டரிடம் ராஜரத்தினம் சொன்னாராம். ''ஏம்ப்பா... நான் இந்தக் கச்சேரிக்கு மட்டும் மூவாயிரம் ரூபாய் வாங்கியிருக்கேன். உன் மாசச் சம்பளமே ஆயிரத்தைத் தாண்டாது. நீ பெரியவனா, நான் பெரியவனா?''

கலெக்டர் என்ன, மைசூர் மகாராஜாவையே ஒரு பிடி பிடித்துவிட்டார். கச்சேரி முடிந்ததும் கைதட்டிப் பாராட்டிய மகாராஜா, ''கணக்குப்பிள்ளை, பணத்தை எடுத்துவந்து பிள்ளைக்குக் கொடு'' என்றாராம். உடனே பிள்ளை, பக்கவாத்தியம் வாசித்தவரைக் கூப்பிட்டு, ''மேளக்காரரே... பணத்தை வாங்கும்'' என்று சொல்லிவிட்டு, மகாராஜாவிடம், ''நீங்கள் மாநிலத்துக்கு ராஜா என்றால் நான் இசைக்குச் சக்கரவர்த்தி'' என்று சொல்லியிருக்கிறார். அப்புறம் மகாராஜா தன் கையாலேயே பிள்ளைக்குச் சன்மானம் செய்தாராம்!

இதுபோன்ற - இருக்க வேண்டிய - திமிர்க்குணத்தாலேதான் அவர் குடுமியை எடுத்துவிட்டு கிராப் வைத்துக்கொண்டதும், அக்ரஹாரத்தில் ஆனாலும் அரண்மனையில் ஆனாலும் செருப்பு போட்டுக்கொண்டு நடந்ததும்!

இந்தக் குணம் கொஞ்சம் எல்லை மீறியபோதுதான் இவர் ஒப்புக்கொண்ட இடங்களுக்கு கச்சேரிக்குப் போகாததும், 'லைட்’ ஆக 'சுதி’ ஏற்றிய நிலையிலேயே எல்லாரையும் தூக்கியெறிந்து பேசியதும் நடந்திருக்க வேண்டும். மாலை 7 மணிக்கு வருவதாகச் சொன்ன இடத்துக்கு நள்ளிரவு 12 மணிக்குப் போவார். ஜனம் இவரைச் சபித்தபடி உட்கார்ந்திருக்கும். போய் மேடையில் பக்கவாத்தியத் தோரணைகளோடு அமர்ந்து வாசிக்க ஆரம்பித்ததும் மோகனாஸ்திரம் விழுந்த லாகிரியில் மயங்கிக்கிடக்கும் ஊர். விடிகாலை ஏழோ, எட்டோ கச்சேரி முடிந்ததும், கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுப் போகும்.

'ராஜரத்தினம் பிள்ளை’ என்றதும், அவருக்கு நெருக்கமானவர்களின் முதுமையில் தளர்ந்த கண்கள் இப்போதும் பிரகாசமாகிவிடுகின்றன.

''சுதந்திரம் கிடைச்ச நாள். குடியரசுத் தலைவர் மாளிகையில் கொடியேறிய நாளன்று நேருவின் முன்னிலையில் நாகஸ்வரம் வாசிச்சார் பிள்ளைவாள். சொக்கிப் போயிட்டார் நேரு...'' என்று பெருமையாக ஆரம்பித்தார் திருவிடைமருதூரில் வசிக்கும் டி.எஸ்.மகாலிங்கம் பிள்ளை. அந்த விழாவில், பிள்ளை வாசித்த நாகஸ்வரத்துக்கு இவர்தான் தவில்.

''பிள்ளைவாளோட வாசிப்பைக் கேட்ட நேரு, 'உங்களுக்கு என்ன வேணும்?’னு கேட்டார். உடனே ராஜரத்தினம் பிள்ளை, 'எங்க ஊரிலே திருட்டுப் பயம் ஜாஸ்தி, கரன்ட் வேணும்’னு சொன்னார் ராஜரத்தினம் பிள்ளை. நாங்க நிகழ்ச்சி முடிஞ்சு ஊருக்கு வரும்போது திருவாவடுதுறை முழுக்க லைட் எரிஞ்சது. நேருவைப் பாத்துட்டு வந்ததுக்கப்புறம் அந்த மாதிரி ஷெர்வானி, ஓவர்கோட், ஷூனு இவர் தன்னோட தோற்றத்தையே கொஞ்ச நாள் மாத்திக்கிட்டது வேற விஷயம்'' என்றார் மகாலிங்கம் பிள்ளை.

ராஜரத்தினம் பிள்ளை தன் கைப்பட 'கெவுர்மென்டார் இவரை ஆதரித்து தகுந்த ஏற்பாடு செய்து தரவேணும்’ என்று நற்சாட்சிப் பத்திரம் எழுதிக் கொடுத்திருப்பது, நாகஸ்வரம் தயாரிக்கும் 80 வயசு ரங்கநாத ஆச்சாரிக்கு. இவர் நரசிங்கன்பேட்டையில் இருக்கிறார். பொதுவாக அந்தக் காலத்தில் 'திமிரி’ என்கிற - அளவில் சிறிய - நாகஸ்வரம்தான் புழக்கத்தில் இருந்தது. திருவிழாவில் வாசித்தால் ஆறு மைல் தூரத்துக்கு அப்பாலும் கேட்கும். அந்த அசுர வாத்தியத்தில் நளினம் சேர்த்து அதை ராஜ வாத்தியமாக்க விரும்பினார் ராஜரத்தினம் பிள்ளை. ரங்கநாத ஆச்சாரியுடன் உட்கார்ந்து விதவிதமான சோதனைகள் செய்து 'பாரி’ என்கிற - அளவில் பெரிய - இனிய சத்தம் எழுப்பும் நாகஸ்வரத்தை வடிவமைத்தார். ''அவரு எழுதிக் குடுத்த நற்சாட்சிப் பத்திரத்தை பத்திரமா வெச்சிருக்கேன்!'' என்றார் ரங்கநாத ஆச்சாரி.

'திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம்’ வளைவுக்குள் நுழைந்து வளைந்து நெளிந்து போனால் ராஜரத்தினம் பிள்ளை வாழ்ந்த வீடு. தன் பழமையை இழந்து புதுப் பூச்சுகளோடு நிற்கிறது.

திருவாவடுதுறை மடத்தோடு நேர்ந்த ஏதோ சிறு மனக்கசப்பின் காரணமாக புதுவீடு கட்டிக் குடியேற விரும்பிய பிள்ளை, ஏராளமான ஆட்களை நியமித்து ஐந்தே நாட்களில் முழு வீட்டையும் கட்டி முடித்துவிட்டார். அது சில மாதங்களுக்குள்ளேயே இடிந்து மறுபடி புதுசாகக் கட்டவேண்டி வந்தது.

ஆனால், மடத்தை விட்டுக்கொடுக்காமல் இவர் நடந்துகொண்ட சம்பவமும் உண்டு. 'பண்டார சந்நிதி (மடத்துத் தலைவர்) வீதி உலா வரும்போது அதைத் தடுக்க வேண்டும்’ என்று சுயமரியாதைக் கட்சிக்காரர்கள் திட்டம் போட்டார்கள். ''நீங்க வீதி உலா போங்க... நான் பாத்துக்கிறேன்'' என்றார் பிள்ளை.

சுயமரியாதைக்காரர்கள் நின்றிருந்த இடத்தை ஊர்வலம் நெருங்கும்போது, எங்கிருந்தோ வந்த ராஜரத்தினம் தடாலென பண்டார சந்நிதி பல்லக்கின் முன்பு விழுந்து கும்பிட்டார். ''ராஜரத்தினம் பிள்ளையே வந்து கால்ல விழறாரு. இந்தப் பண்டார சந்நிதி உண்மையிலேயே மகான்தான் போலிருக்குது'' என்று போராட்டக்காரர்கள் கலைந்து போய்விட்டார்கள்.

அப்போதெல்லாம் ரயில் இவரது ஊரில் நிற்காது. அதனால் வெளியூர் சென்று திரும்பும் சமயம் தன் வீட்டின் பின்புறமாக ரயில் ஓடும்போது அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்தி 50 ரூபாய் அபராதம்  கட்டிவிட்டு வீட்டுக்குப் போவது இவருடைய வழக்கம்.

''யாராயிருந்தாலும் வித்தை இருந்தா மதிப்பார் ராஜரத்தினம் மாமா'' என்றார் சீனியர் மோஸ்ட் ஃப்ளூட் கலைஞர் நவநீதத்தம்மாள். ''ஒருநாள் என்னைப் பாத்து 'காம்போதி வாசி நாயே’ என்றார். வாசிச்சேன். என் அம்மாவைக் கூப்பிட்டுக் கும்பிட்டார். 'உன்னைக் கும்பிடலை. இந்தக் குழந்தையைச் சுமந்துதே உன் உந்திக்கமலம். அதைக் கும்பிடறேன்’ அப்படின்னார்'' என்கிறார் நவநீதத்தம்மாள்.

ராஜரத்தினம் பிள்ளையின் மருமகன் கக்காயி நடராஜ சுந்தரத்தின் மைத்துனரும் கலைவிமர்சகருமான தேனுகா. முத்தாய்ப்பாகச் சொன்னார்; ''நயாகரா மாதிரி பிருகாக்களைப் பொழியும் ராஜரத்தினத்தின் மேதமையை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. இசைப் புலமையைப் போலவே அவரது மன உருவமும் (Psychic Landscape) அதீதமானது. அதனால்தான் அவரது குணத்தைப் பற்றி சுவாரசியமான இவ்வளவு கதைகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.''

[ நன்றி: https://www.vikatan.com/news/miscellaneous/26837-]

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

2220. எஸ். எஸ். வாசன் - 5

 விகடன் ஆசிரியர் 

ஆகஸ்ட் 26. வாசனின் நினைவு நாள்.

வாசன் மறைந்த பின், விகடனில் வந்த தலையங்கம். 

=== 

விகடனின் நூற்றுக்கணக்கான ஊழியர்களையும், லட்சக்கணக் கான வாசக நேயர்களையும் ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு, மீளாத்துயில் கொண்டுவிட்டார் ஆசிரியர் திரு எஸ்.எஸ். வாசன். ஓய்வு என்பதே அறியாமல் அல்லும் பகலும் உழைத்தவர், இறுதியாக ஒய்வு எடுத்துக்கொண்டு விட்டார். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்றே காலமெல்லாம் வாழ்ந்தவர், எல்லோரையும் கண்ணீ ர் பெருக்கி, கதறி அழும்படி விட்டுவிட்டு மறைந்துவிட்டார்.

எளிமையான குடும்பத்தில் பிறந்து வறுமையின் மடியில் வளர்ந்து, தன்னந்தனி சிறுவனாக தன்னருமைத் தாயே ஆதரவாக தன்மானம் மிக்க இளைஞராக, தன்னம்பிக்கையே துணையாக உழைத்து உழன்று இவர் உயர்ந்த கடந்த அறுபதாண்டு வரலாற்றுடன் கலந்து விட்ட தனிமனிதனின் ஒப்பற்ற வாழ்க்கை சரிதமாகும். பத்திரிகை விற்பனையாளராகவும் விளம்பர சேகரிப்பாளராகவும், எழுத்தாளராகவும், பத்திரிகையாசிரியராகவும் படிப்படியாக உயர்ந்து சமூகத்தில் தமக்கு என்று ஓர் இடத்தைத் தேடிக்கொண்டார்.கலாரசனையில் ஊறித் திளைத்த அவரது உள்ளம், படவுலகில் நாட்டம் கொண்டது.தமக்கே உரிய மதிநுட்பத்துடனும், புதுமைகளைப் படைக்கும் சாதனைத் திறனுடனும் சினிமாத் துறையில் பிரமிக்கத்தக்க வெற்றிகளைப் பெற்று அகில இந்திய அரங்கில் புகழ்க்கொடி நாட்டினார். விகடன் ஆசிரியராகப் பெற்ற அனுபவத்தின் காரணமாகவே தாம் திரைப்பட டைரக்டராகவும், 'எடிட்டராகவும் விளங்க முடிந்தது என்று ஆசிரியர் வாசன் அடிக்கடி கூறிப் பெருமைப் படுவது உண்டு.

ஆசிரியர் வாசன் இளமைப் பருவத்தில் இருந்தே நாட்டு அரசியலில் அதிக அக்கறை காட்டி வந்தார். தேசிய நோக்குடனேயே எந்தப் பிரச்னையையும் அலசி ஆராய்வார். நாட்டின் எதிர்காலத்தை மனத்தில் கொண்டு விருப்பு வெறுப்பின்றி தம் எண்ணங்களைக் கூற வேண்டும் என்பதில் கடைசிவரையில் உறுதியாக இருந்தார். தமது இறுதி நாட்களில் நாட்டின் குழப்பமான அரசியல் நிலைமை யைப் பற்றி அடிக்கடி நினைத்து வேதனைப் படுவார். காலன் வந்து கட்டிலருகில் காத்திருந்த நேரத்திலும் காங்கிரஸ் காரிய கமிட்டி என்ன முடிவு செய்யப் போகிறது என்பதே அவர் கவலையாக இருந்தது.

நாற்பத்தோரு ஆண்டுகளாக விகடனை வளர்த்து உருவாக்கிய அவர் சமூக அரசியல் சூழ்நிலைக்கும் மக்களின் ரசனைக்கும் ஏற்ப  அவ்வப்போது பத்திரிகை மாற்றங்களைச் செய்யத் தயங்கியதேயில்லை. இருப்பினும் விகடனுக்கென்று ஒரு தரம் உண்டு, ஒரு வழி உண்டு, ஒரு கொள்கையுண்டு அவற்றைப் பறிகொடுக்காமல் நாம் வளர வேண்டும். கடினமாயிருந்தாலும் அந்த வழியில்தான்  முன்னேற வேண்டும் என்பதை நேரம் கிடைத்த போதெல்லாம் சக ஊழியர்களுக்கு  நினைவு படுத்துவார்.

பத்திரிகை உலகுக்கு உன்னத லட்சியங்களையும் உன்னத நெறிகளையும் உயரிய  கோட்பாடுகளையும் வகுத்துத் தந்த  வழிகாட்டி இன்று நம்மிடையே இல்லை. ஆனால், அவர் காட்டிச் சென்ற வழி பளிச்சென்று நம் கண் முன் தெரிகிறது.  தளராத நம்பிக்கையுடனும் நேயர்களின் பேராதரவுடனும் அவ்வழி செல்லுவதே மறைந்த ஆசிரியரின் நினைவுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

[ நன்றி: விகடன் ] 
[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

2219. வ.சு.செங்கல்வராய பிள்ளை - 3

உ.வே.சாமிநாதையருடன் தணிகைமணி

சி.இலட்சுமணன்

ஆகஸ்ட் 25. செங்கல்வராய பிள்ளையின் நினைவு தினம்.

====

1910ஆம் ஆண்டு பிள்ளை அவர்கள் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒருநாள் சிதம்பரத்திற்குச் சென்று “அருணகிரி நாதர் வரலாறு” என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இவர்தம் பேச்சைக் கேட்ட டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் இவரைப் பாராட்டிப் பேசிய நிகழ்வு குறிப்பிடத் தக்கதாகும்.

ஒருநாள் உ.வே.சா. பிள்ளை அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்தார். இந்நிகழ்வை, நமது வீடு புண்ணியம் பண்ணிற்று என்றும் “தமிழ்த் தொண்டுக்காக ரூபாய் 50 அவருக்குக் கொடுத்தோம்" என்றும் தமது நாட்குறிப்பில் குறித்து வைத்துள்ளமை இவண் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒவ்வோர் ஆண்டும் பிள்ளை அவர்கள் உ.வே.சா. ஐயரைப் பார்த்துப் பேசி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1942ஆம் ஆண்டு சனவரி மாதம் ஐயர் அவர்களது இல்லத்திற்கு இவர் சென்றார். அங்குத் தமிழ்த்தாத்தா என்று அன்போடு அனைவராலும் கூறப்படும் உ.வே.சா. நோயுற்று படுக்கையில் இருந்தார். பிள்ளையவர்கள் அவர் அருகில் சென்று நின்றார். ஐயர் அவர்கள் மகிழ்ச்சியோடு திருப்புகழ் ஆராய்ச்சி செய்த கைகளாயிற்றே என்று பிள்ளையவர்களின் இருகைகளையும் தம் கண்களில் ஒத்திக் கொண்டார்.

உடனே உள்ள நெகிழ்ச்சியோடு கண்களில் நீர்மல்க ஐயரவர்களின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு சங்கத் தமிழ் நூல்களைத் தேடி அலைந்த கால்களாயிற்றே என்று கூறி பிள்ளை அவர்களை வணங்கி நின்றார். தமிழ்மேல் பிள்ளையவர்கள் கொண்ட பேரன்பிற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும்.

[ நன்றி: "தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை" , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

2218. கிருபானந்தவாரியார் - 6

அன்னதானம்

கிருபானந்தவாரியார்

ஆகஸ்ட் 25. கிருபானந்தவாரியாரின் பிறந்த தினம்.

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:
கிருபானந்தவாரியார்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

புதன், 24 ஆகஸ்ட், 2022

2217. கி.சந்திரசேகரன் - 1

ரஸிக சிகாமணி

டி.எல்.வேங்கடராம ஐயர்

1964-இல் கி.சந்திரசேகரன்(1904-1988) அவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா நடந்தபோது 'கல்கி'யில் வந்த கட்டுரை இதோ.  

சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் , சங்கீத கலாநிதி டி.எல்.வெங்கடராம ஐயர்  அவரைப் பற்றிய ஒரு நல்ல அறிமுகம் தந்திருக்கிறார். 

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

2216. பாடலும் படமும் - 147

மயில்களைத் தொடரும் மயில்கள்! 

1943-இல் கல்கியில் வந்த  இன்னுமொரு கவிச்சித்திரம் . மணியம் அவர்களின் ஓவியம்.

படவிளக்கம் :

பாடலுக்குப் பதவுரை:

இடம் கொள் சாயல் கண்டு, இளைஞர் சிந்தைபோல்,

தடங் கொள் சோலைவாய், மலர் பெய் தாழ் குழல்

வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்

தொடர்ந்து போவன-தோகை மஞ்ஞையே.

தோகை   மஞ்ஞை - தோகையை உடைய ஆண் மயில்கள்; 

தடம் கொள்  சோலைவாய்-  விசாலமான சோலையினிடத்தே; 

இடம் கொள் சாயல்  கண்டு-  (தமது பெண் மயில்களின்  பெருமைக்குரிய சாயலைப் பார்த்து);  

இளைஞர் சிந்தை போல்- இளம் வயதினரான ஆண்களின் மனத்தைப்   போல ;  

மலர்  பெய்தாழ்  குழல்-  மலரணிந்த  நீண்ட கூந்தலையும்;  

வடம்   கொள்  பூண்  முலை-  முத்து  மாலைகளை அணிந்த   தனங்களையும்   உடைய;  

மடந்தை  மாரொடு-  அந்தப் பெண்களுடனே; 

தொடர்ந்து போவன- பின்தொடர்ந்து செல்வனவாம். 

ஆண்  மயில்கள் சோலையில் உலாவும் பெண்களை சாயலால் மயில்

போன்றிருக்கும்   அவர்களைப்   பெண்மயில்கள்   என்று     கருதிப்

பின்தொடரும்    என்றது    மயக்கவணி.    இளைஞர்:      காளைப்

பருவத்தினரான  ஆண்கள்.  இடம்:  பெருமை.  வடம்: முத்து 

  வடம். தாழ்குழல்: நீண்ட கூந்தல்.          

[ நன்றி : கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

2215. சங்கீத சங்கதிகள் - 325

புரியாத புதிரும் அவிழ்ந்தது!

ஜேம்ஸ் ஏ. ரூபின்

1966-இல் 'கல்கி'யில் வந்த கட்டுரை. அமெரிக்காவில் நடந்த சில எம்.எஸ். கச்சேரிகளைப் பற்றிய விவரங்கள் உள்ளன.

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

சங்கீத சங்கதிகள் - 1

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

2214. சங்கீத சங்கதிகள் - 324

 கர்நாடக சங்கீத வித்வான்கள் : 11 - 12 

சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

சங்கீத சங்கதிகள் - 1

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

2213. லக்ஷ்மி - 10

பெண்கள் உலகம் : 4. வள்ளி

" லக்ஷ்மி" 

[ நன்றி: கல்கி ]                                                      

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

லக்ஷ்மி

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

0

சனி, 20 ஆகஸ்ட், 2022

2212. வ.ரா. - 12

நெல்மண்டி ஏழுமலை 

வ.ரா.

1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த இன்னொரு நடைச் சித்திரம்.

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

வ.ரா. 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be

 found on the top right-hand side of my blog, the service , follow.it    

      will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

2211. ஓவிய உலா -32

தாயிற் சிறந்த தத்துவன்!

அட்டைப் பட விளக்கத்தை ரா.கணபதி எழுதியிருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

[ நன்றி: கல்கி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

2210. தி.ந.இராமச்சந்திரன் -3

திருலோக சீதாராமின் ' விறகும் தீயும்'

தி.ந.இராமச்சந்திரன்

ஆகஸ்ட் 18. 'சேக்கிழார் அடிப்பொடி' தி.ந.இராமச்சந்திரனின் பிறந்த தினம். 

திருலோக சீதாராமின் ஒரு கவிதையை ஷேக்ஸ்பியரின் துணைகொண்டு அலசுகிறார் டி.என்.ஆர்.

அவருடைய ஆங்கிலப் புலமையை இங்குச் சிறிது காணலாம்! 

[நன்றி: சிவாஜி]