புதன், 31 டிசம்பர், 2014

சங்கீத சங்கதிகள் -44

சங்கீத நினைவுகள் -2
சுப்புடு 

"இசை விமரிசனம் படிக்க இசையைப் பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லாவிட்டாலும், படித்துச் சிரித்து அனுபவிக்க ரஸனை இருந்தால் போதும் என்று அறிமுகம் செய்தவர் சுப்புடு. “ 
                                          எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் 
டொராண்டோவில் ( 1994)  ஒரு திருப்புகழ் இசை வழிபாட்டில் எலெக்ட்ரானிக் ஆர்கன் வாசிக்கும் சுப்புடு 



வயலின் வித்வான் கரூர் சின்னஸ்வாமி அய்யர் மிகவும் கறார்ப் பேர்வழி. ராமகிருஷ்ண மடத்துக்காக நிதி திரட்ட முசிரி சுப்ரமண்ய அய்யர் இவரையும், தஞ்சாவூர் வைத்யநாதய்யர் அவர்களையும் தமக்குப் பக்கவாத்தியமாக அமைத்துக்கொண்டு பல கச்சேரிகள் செய்தார். அப்போதெல்லாம் மைக் கிடையாது. முசிரி அப்போதெல்லாம் மூன்று கட்டை சுருதியில் அலட்சியமாகப் பாடுவார். ரங்கூன் ஜூபிலி ஹாலில் எள்ளுப் போட்டால் விழாத கூட்டம். ஒருநாள் காம்போதி ராக ஆலாபனை பல்லவி விஸ்தாரத்துக்கு அமைந்தது. கந்தர்வ கானம் தான் போங்கள்! பல்லவிக்கு ‘நமக்கினி பயமேது, ஸ்ரீ ஷண்முகநாதன் துணையிருக்கும்போது’ எடுப்பு. அப்போதெல்லாம் பக்க வாத்யம் பக்க வாதமாகவோ பக்கா வாத்யமாகவோ இல்லாமல் உண்மையில் பக்க வாத்யமாகவே இருந்தது. துளி இடைஞ்சல் கிடையாது. கரூரார் அபரிமிதமான அனுசரணையுடன் வாசித்தார். மணி ஒன்பதரை ஆகிவிட்டது. நாலரை மணிக்கு ஆரம்பித்த கச்சேரி.


சீட்டுகள் அட்சதை மாதிரி குவிந்து கிடந்தன. உதார குணத்துக்கும் ரசிகர்களின் ஆதரவுக்கும் பெரு மதிப்பு கொடுக்கும் முசிரி சீட்டுகளை ஒன்றொன்றாய் எடுத்து நோக்க ஆரம்பித்தார். கறார் கரூரார் தம் தொங்கின பையிலிருந்து கடிகாரத்தை எடுத்துப் பார்த்தார்.

முன்வரிசையில் உட்கார்ந்திருந்த புதுப்பணக்காரர் ஒருவர், “ஸ்வாமி, ரசிகாள் விரும்பறா! நீங்கள் மணியைப் பார்க்கக் கூடாது” என்றார் அலட்சியமாக. சபையும் சற்றே சலசலப்பு கண்டது.

கட்டை விரலில் ஆள்காட்டி விரலை வைத்துச் சுண்டி, “நீங்களும் மணி ( Money ) யைப் பார்க்கக் கூடாது ! “ என்றார் கரூரார். இரவு “தேயிலைத் தோட்டத்திலே” போய்ச் சேரும்போது மணி பதினொன்று.






[ நன்றி: தினமணி கதிர் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

வெள்ளி, 26 டிசம்பர், 2014

சங்கீத சங்கதிகள் -43

சங்கீத நினைவுகள் -1 
சுப்புடு 

பிரபல இசை, நாட்டிய விமர்சகர்   சுப்புடுவின் விமர்சனங்களையும், அவற்றின் தொகுப்பாக வந்த சில நூல்களையும் பலர் படித்திருப்பார்கள்.

இதோ அவருடைய நூல் ஒன்றின் அட்டைப் படமும், அவருடைய முன்னுரையும் :





அவருடைய விமரிசனங்கள் பலவற்றின் படிகளைச் சுப்புடு அவர்கள் 94-இல் டொராண்டோ வந்தபோது அவருக்குக் கொடுத்தவன் நான்தான். ( ஆனால் நூல் வெளியிடும் போது, என் பெயரை மறந்து, அதை மாற்றி ”பாலசுப்பிரமணியம்” என்று எழுதிவிட்டார்! அது போகட்டும்! )

94-இல் டொராண்டோவில் சுப்புடு தம்பதியர்


அவருக்கு நான் கொடுத்தவை தவிர மேலும் சில கட்டுரைகள் என்னிடம் இருக்கின்றன என்று எண்ணுகிறேன். அவற்றுள் சிலவற்றை, முடிந்தவரை சில மூல படங்களுடன்  இந்தத் தொடரில்... அவ்வப்போது .... இட எண்ணுகிறேன்.  இதோ முதல் கட்டுரையின் முதல் பகுதி !

அவருடைய நகைச்சுவை உணர்வை இதில் ரசிக்கலாம்!





அவர்களின்  நலனைக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். போன வாரம் கூட கல்கத்தாவில் போலீஸ்காரர்கள் அசெம்பிளியில் புகுந்து அட்டகாசம் செய்தார்கள். கேள்வி கேட்பார் இல்லை. ஏகத் திருட்டு. இரண்டு நாள் முன்னால் கோல் மார்க்கெட்டில்  பட்டப் பகலில் அவ்வளவும் கொள்ளை போய்விட்டது. கேள்வி கேட்பார் இல்லை.அந்தக் காலத்தில் கோல் மார்க்கெட்டில்  வீட்டைத் திறந்துவிட்டுப் போகலாம். அப்போதெல்லாம் டெல்லியில் வீட்டுக் கஷ்டம் கிடையாது. டெல்லியில் உள்ள சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் ஆறு மாதம் சிம்லா போகும்போது அவர்களுடைய டில்லி வீடு பூட்டிக் கிடக்கும். யாராவது இருந்து விளக்கேற்றினால் போதும் என்று கெஞ்சுவார்கள். வீட்டு வாசலிலேயே எருமையைக் கொண்டு வந்து கறப்பான். ரூபாய்க்குப் பதினாறு படி. ஒரு எருமை இரண்டாயிரம் பெறும். கீழே பெரிய வாளியைக் கொண்டு வைத்து கறப்பான். சொட்டு தண்ணீர் விடமாட்டான் . . .  . .  "

போதுமா? எங்கேயோ ஆரம்பித்து எருமை மாடு வரை வந்து விடுவார்!

[ நன்றி: தினமணி கதிர் ]

தொடர்புள்ள பதிவுகள்: 
சுப்புடு
சங்கீத சங்கதிகள் : கட்டுரைகள்

புதன், 24 டிசம்பர், 2014

பதிவுகளின் தொகுப்பு: 251 – 275

பதிவுகளின் தொகுப்பு: 251 – 275







251. பதிவுகளின் தொகுப்பு: 226 – 250

252. ஆனந்த சிங்: மாயக் களவு -1

253. ஆனந்த சிங்: மாயக் களவு -2

254. ஆனந்த சிங்: மாயக் களவு -3

255. ஆனந்த சிங்: மாயக் களவு -4

256. தென்னாட்டுச் செல்வங்கள் – 11
கங்கை கொண்ட சோழபுரம் -1

257. தேவன் - 18 ; ராஜத்தின் மனோரதம்

258. தென்னாட்டுச் செல்வங்கள் – 12
கங்கை கொண்ட சோழபுரம் -2

259. சுதந்திர விகடன்

260. தென்னாட்டுச் செல்வங்கள் – 13
கங்கை கொண்ட சோழபுரம் -3

261. பாடலும் படமும் – 7
பிள்ளையார் சிந்தனை

262. தென்னாட்டுச் செல்வங்கள் – 14
கங்கை கொண்ட சோழபுரம் -4

263. தேவன் -19 : இதென்ன உபசாரம் ?

264. பி.ஸ்ரீ. -9: பாரதி விஜயம் -1

265. சங்கீத சங்கதிகள் – 39
இசைக்கு ஒரு ராணி! -- டி.டி.கிருஷ்ணமாச்சாரி

266. தென்னாட்டுச் செல்வங்கள் - 15
கங்கை கொண்ட சோழபுரம் -5

267. பாடலும் படமும் - 8 :அபிராமி அந்தாதி -2

268. தென்னாட்டுச் செல்வங்கள் - 16
கங்கை கொண்ட சோழபுரம் -6

269. சங்கீத சங்கதிகள் - 40
சிவனின் தீபாவளிப் பாடல்கள்   

270. கவிதை எனக்கோர் ஆனந்தம் ! :

271. முல்லைத் திணை வாசன் :கவிதை

272. கவிஞர் சுரபி – 1

273. சாவி -11: 'அப்பச்சி' அருணாசலம்

274. கல்கி - 6 : மாணிக்கத்தை இழந்தோம்

275. ராஜாஜி – 1


 தொடர்புள்ள பதிவுகள்:

வியாழன், 18 டிசம்பர், 2014

சங்கீத சங்கதிகள் -42

சங்கீத சீசன் 1955: ஆடல் பாடல் -2



முந்தைய பதிவு 

சீசன் 55 -1

' ஆடல் ‘ என்று தலைப்பில் இருக்கும்போது, நாட்டியக் கச்சேரிகளைப் 

பற்றி எழுதித்தானே ஆகவேண்டும்?  

55- சீஸனில் நடந்த நாட்டியக் கச்சேரிகளைப் பற்றி ‘விகடனில்’ வந்த 

 இரண்டாம் ‘ஆடல் பாடல்’ கட்டுரை இதோ! 


சில பெயர்களை உதிர்க்கிறேன்....ருக்மிணி தேவி, கமலா லக்ஷ்மண், 


லலிதா பத்மினி, பாலசரஸ்வதி , மிருணாளினி சாராபாய், மார்த்தா 


கிரஹாம் .... எதற்கு? நீங்களே படியுங்கள்!








[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


[ நன்றி : விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

சீஸன் 53 : 1  சீஸன் 53: 2  சீஸன் 53 : 3

சீஸன் 54: 1  சீஸன் 54: 2  
சீசன் 54-3

சீஸன் 55-1  சீஸன் 55-2

மற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்

திங்கள், 15 டிசம்பர், 2014

ஸர்தார் வல்லபாய் படேல்

சுதந்திர இதிகாசத்தில் ஒரு கதை 


டிசம்பர் 15, 1950. 
ஸர்தார் வல்லபாய் படேல் மறைந்த தினம்.


 ‘ஆனந்த விகடன்’ அடுத்த இதழில் வெளியிட்ட கட்டுரை இதோ!









[ நன்றி : விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
ஸர்தார் வல்லபாய் படேல்